Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Zee Studios மற்றும் Wayfarer Films இணைந்து வழங்கும், மெகா ஸ்டார் துல்கர் சல்மான் நடிப்பில் “கிங் ஆஃப் கோதா” திரைப்படத்தின் பரபரக்க வைக்கும், அட்டகாசமான டீசர் வெளியானது !

Posted on June 28, 2023June 28, 2023 By admin

Zee Studios மற்றும் Wayfarer Films இணைந்து வழங்கும், மெகா ஸ்டார் துல்கர் சல்மான் நடிப்பில் “கிங் ஆஃப் கோதா” திரைப்படத்தின் பரபரக்க வைக்கும், அட்டகாசமான டீசர் வெளியானது !

Zee Studios மற்றும் Wayfarer Films’ வழங்கும் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் ஒவ்வொரு அறிவிப்பையும் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இறுதியாக தற்போது இப்படத்தின் இரத்தம் தெறிக்கும், அதிரடியான டீசரை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

டீசரில் கோதா மக்கள் அரசனைக் காண்பது போல் மொத்தமாக ஒதுங்கி துல்கர் சல்மான் காருக்கு வழி விடுகின்றனர். ஸ்டைலான பழம்பெருமை மிகுந்த மெர்சிடிஸ் காரில் ‘தி கிங்’ (துல்கர் சல்மான்)  வருவதைப் பார்க்கும்போது,  நம் மொத்த கவனமும் அவர் மேல் குவிகிறது. மன்னிக்கத் தெரியாத வன்முறையாளனாக, இரக்கமற்ற கொடூரனாக வசீகரிக்கும் தோற்றத்தில் மிரட்டுகிறார் துல்கர் சல்மான்.

 ‘கிங் ஆஃப் கோதா’ டீசர் கோதா மக்களின் வாழ்க்கையை காணும் ஆவலைத் தூண்டுகிறது. அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியிருக்கும் இப்படத்தின்  இந்த டீஸர், நிச்சயமாகப் பார்ப்பவர் அனைவரிடத்திலும் ஒரு பேரதிர்வை ஏற்படுத்துவதுடன், திரைப்படத்தைப் பார்க்கும் ஆவலைத்  தூண்டுகிறது.  இப்படம் 2023 ஓணம்  பண்டிகை அன்று உலகமெங்கும் வெளியாகிறது.

Cinema News Tags:Zee Studios மற்றும் Wayfarer Films இணைந்து வழங்கும், அட்டகாசமான டீசர் வெளியானது !, மெகா ஸ்டார் துல்கர் சல்மான் நடிப்பில் “கிங் ஆஃப் கோதா” திரைப்படத்தின் பரபரக்க வைக்கும்

Post navigation

Previous Post: ஸ்வீட் காரம் காபி, ஜூலை 6 அன்று பிரீமியர்; ஒரு ஆரோக்கியமான குடும்பம் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த மூன்று பெண்களைப் பற்றி மறக்க முடியாத மகிழ்ச்சி சவாரியில் பார்க்கிறது.
Next Post: _Zee Studios and Wayfarer Films have just dropped in the mega-teaser of Dulquer Salmaan’s ‘King of Kotha’ and we are filled with rebellious curiosity!_

Related Posts

ரஜினியை சந்தித்த முக்கிய நபர் யார் ❗ Cinema News
Actor Munishkanth starrer “Middle Class” Actor Munishkanth starrer “Middle Class” Cinema News
RRR UP FOR A ZEE5 WORLD DIGITAL PREMIERE IN TAMIL RRR UP FOR A ZEE5 WORLD DIGITAL PREMIERE IN TAMIL, TELUGU, KANNADA & MALAYALAM from 20th May 2022 Cinema News
Ragini Dwivedi -indiastarsnow.com நடிகை ராகினி கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகர் வீட்டில் சோதனை Cinema News
Adithya Varma Film Review Adithya Varma Film Review Cinema News
தமிழரசன் திரை விமர்சனம் -indiastarsnow.com தமிழரசன் திரை விமர்சனம் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme