”:நா ரெடி” (LEO First Single Naa Ready Song) பாடல் வெளியாகியுள்ளது.
நா ரெடி பாடல்:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஷ்ணு எடாவன் எழுதியுள்ள இந்த பாடலை, விஜய் பாடியுள்ளார். நா ரெடி தான் வரவா, எவன் தடுத்தும் என் ரூட்டு மாறதப்பா எனும் இப்பாடலின் வரிகள் விஜய்யின் அரசியல் வருகையைக் குறிக்கும் வகையில் இருப்பதாக பார்க்கப்படுகிறது. பாடல் முழுவதும் தரை லோக்கலாக பாடியுள்ள விஜய், அவர் தனது கதாபாத்திரத்தையே மாற்றப்போகிறார் என கூறும் விதமாக இந்த பாடலின் நோக்கம் அமைந்துள்ளது. யூடியூபில் வெளியான உடனேயே இந்த பாடலை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் லைக் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இந்த பாடல் டிரெண்டாக தொடங்கியுள்ளது.
