திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமத்தில் குடும்பத்துடன் வசிக்கும் இன்பா (லியோ சிவக்குமார்) சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் சென்னையில் உள்ள இயக்குனர்களுக்கு கடிதம் மூலம் வாய்ப்பு தேடுகின்றனர் இன்பா (லியோ சிவக்குமார் மற்றும் ஊரில் புரட்சி நாடகங்களை இயக்கி நண்பர்களுடன் நடிகிறார் இன்பா, கஸ்தூரி (சஞ்சிதா ஷெட்டி) கஸ்தூரியின் கல்லூரி விழாவில் நாடகம் நடத்த கதை எழுதி தருமாறு உதவி கேட்கிறார் கஸ்தூரிக்கு இன்பா உதவிசெய்கிறார் பின்பு எதிர் வீட்டு ஐயர் ஆத்து பெண்ணான கஸ்தூரி(சஞ்சிதா ஷெட்டி) காதல் கொள்கிறார். இயக்குநர் பிரபு சாலமனிடம் வேலை செய்யும் வாய்ப்பு இன்பாவுக்கு கிடைக்கிறது, சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்கிறார் கஸ்தூரி.
ஒரு கட்டத்தில் எதிர்ப்புகளுக்கு இடையே இருவரும் திருமணம் செய்துக் கொள்கின்றனர்.பெண் குழந்தையும் பிறக்கிறது. ஆனால் லியோ இயக்குநராக முயற்சி செய்யும் நிலையில் குடும்பச்சூழல் காரணமாக குழந்தையை அருகில் இருந்து சஞ்சிதாவால் கவனிக்க முடியாமல் போகிறது. ‘அழகிய கண்ணே’ படம் எடுத்துரைக்கிறது.
லியோ சிவக்குமார், சஞ்சிதா, டான்ஸர் சுஜாதா ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை சிறப்பாக செய்துள்ளனர். ஆனால் லியோ சிவக்குமாருக்கு இன்னும் நடிப்பு பயிற்சி வேண்டும். இதேபோல் சினிமாவில் இயக்குநரின் பணியை பிரபு சாலமன் வழியே காட்டியிருப்பது பாராட்டைப் பெறுகிறது. மற்றபடி படத்தில் எந்த கேரக்டரும் பெரிய அளவில் இல்லை. ஒரு காட்சியில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
பணிச்சூழலால் இன்றைய சூழலில் பெருகி வரும் குழந்தை வளர்ப்பு முறை பேசியிருப்பது சிறப்பு. அதேபோல் யூகிக்க கூடிய திரைக்கதையால் படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகிறது. இதேபோல் கதையில் எதிர்பாராத திருப்பமாக காட்டப்பட்டிருக்கும் வில்லன் தொடர்பான காட்சிகளும் மிக சிறப்பு .
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் கேட்கும் வகையில் இருந்தாலும், பின்னணி இசையும் அதற்கேற்ப ஒளிப்பதிவும் பொருந்தி போகிறது.