பானி பூரி வெப்சீரிஸ் 8 எபிசோடுகள் என்றாலும் திரையில் பார்க்கும் அனைவரும் ரசிக்கும் படியாக திரைக்கதை எளியமுறையில் அமைக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு(Living Together) லிவிங் டுகெதர் வாழ்க்கை முறை என்பது இளைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறை அல்ல,என்பதையும் இனிவரும் இளைஞர்களின் வாழ்க்கை முறையில் காதல் காட்சிகள் மற்றும் காதல் வசனங்கள் என அனைத்தையும் இயக்குநர் பாலாஜி வேணுகோபால், திரையின் மூலம் மிக அழகாக இன்றைய இளஞ்சர்களுக்கு புரியும்படியாக உள்ளது இந்த பானி பூரி .
இன்றைய காலகட்டத்தில் குடும்ப அனுமதியோடு (ரோபோடிக் உதவியோடு ) ஒரு லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையை மையப்படுத்திய வெப்சீரிஸில் இந்த பானி பூரி, குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க கூடிய ஒரு வெப்சீரிஸ் பானி பூரி.
லிங்காவும் சம்பிகாகவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். லிங்கா தங்களது காதலை திருமணத்தில் முடிக்க ஆசைப்படுகிறார் . நடிகை சம்பிகா ரோபோக்களை உருவாக்கும் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தனது தந்தையின் கனவை நெறிவேற்றும் மகளாக சம்பிகா. ஆனால் சம்பிகாவுக்கு அவரது தோழியின் திருமண வாழ்க்கை (dives) டைவ்ஸ்ல் முடிந்து விட்டதால் திருமணத்திற்கு பிறகு ஆண்கள் எல்லோருமே மாறிவிடுவார்கள் என்கிற மனோபாவம் உருவாகிறது. இதனால் லிங்காவுடன் காதலை முறித்துக்கொள்ள முடிவு செய்கிறார். இதை அறிந்து அதிர்ச்சியான லிங்கா சம்பிகாவின் வீட்டிற்கு சென்று காரணம் கேட்கிறார்.
லிங்கா& சம்பிகாவின் காதல் பற்றி தெரிந்து கொண்ட சம்பிகாவின் தந்தை இளங்கோ குமரவேல் இவர்களுக்குள் காதல் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்துவதற்காக ஒரு ஆலோசனை வழங்குகிறார். அதன்படி காதலர்கள் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் ஒரு வாரம் தனியாக வாழ்க்கை நடத்துமாறும் அதில் ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு இருக்கிறதா என்பது புரிந்துவிடும் என்று ஐடியாவை கொடுக்கிறார் சம்பிகாவின் தந்தை .
திரைப்படங்களை விட வெப்சீரிஸ்கள் மூலம் நடிகர் லிங்கா ரசிகர்களிடம் எளிதாக சென்று சேர்ந்துள்ளார். இந்த பானி பூரி வெப்சீரிஸ் மூலம் அதை இன்னும் அழகாக தக்க வைத்துக் கொண்டுள்ளார். காதலை மையப்படுத்திய ஒரு தொடரில் மிக இயல்பாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். குறிப்பாக காதலை பெறுவதற்கு முன், காதலை பெற்ற பின் என ஒரு சராசரி இளைஞனின் குணாதிசயத்தை அழகாக பிரதிபலித்திருக்கிறார்.
சம்பிகாவின் தந்தையாக நடித்திருக்கும் இளங்கோ குமரவேல், ஜாலியான தந்தையாக மட்டும் இன்றி மகளை சரியாக புரிந்துக்கொண்ட தந்தை வேடத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். லிங்காவின் நண்பராக வரும் வினோத் சாகர், வரும் ஆரம்ப காட்சிகள் நம்மை சிரிக்க வைத்தாலும் கதை போகிற போட்டு ஒரு குணசித்திர நடிகராக மாறிவிடுகிறார். நாயகனின் அண்ணனாக நடித்திருக்கும் ஸ்ரீகிருஷ்ண தயாள், அண்ணியாக நடித்திருக்கும் கனிகா இருவரும் தாங்கள் பொருத்தமான தேர்வு என்பதை நிரூபிக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு, கதை முழுவதையும் கட்டிடங்களுக்குள் வைத்தே காட்சிப்படுத்தி இருந்தாலும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார். இசையமைப்பாளர் நவ்னீத் சுந்தரின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது
இன்றைய காதல் குழப்பத்தில் தவிக்கும் இளைஞர்களுக்கு ஒரு சரியான வழிகாட்டியாக இருக்கும் இந்த பானி பூரி வெப்சீரிஸ்