Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் இந்தியாமுயற்சியில்!!!

தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் இந்தியாமுயற்சியில்!!!

Posted on June 13, 2023June 13, 2023 By admin

தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் இந்தியா 95 மற்றும் மெட்ராஸ் மெட்ரோ லேடீஸ் சர்க்கிள் 70 ஆகியவற்றின் முயற்சியில் 23 லட்சரூபாய் மதிப்பிலான 2 வகுப்பறைகளை அமைச்சர் தா.மோ. அன்பரசன்,எம்பி டி.ஆர்.பாலு, எம.எல்.ஏ கருணாநிதி,மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், ரோஷன் குமார், பாயல் மேத்தா ஆகியோர் திரிசூலத்தில் திறந்து வைத்தனர்

திரிசூலம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட இந்த இரண்டு வகுப்பறைகளையும் அமைச்சர் தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், எம்எம்ஆர்டி ரோஷன் குமார், எம்எம்எல் சி பாயல்மேத்தா உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

இந்த புதிய வகுப்பறைகளை, முழு முயற்சி செய்து கட்டிக்கொடுத்த ரவுண்ட் டேபிள் இந்தியாவின் விஜயராகவேந்திரா, திவ்யா சேத்தன் உள்ளிட்டோரை அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினர்.

இந்த 2 வகுப்பறைகளும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் தரமான கல்வியை உறுதி செய்யும் என்று கூறிய சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, எதிர்கால மாணவர்களின் நலனுக்கும் இது உதவும் என்றார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு அறிவிப்பின் மூலம் மீண்டும் அரசுப்பள்ளிகள் மீது மக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தரமான வகுப்பறைகளை உருவாக்குவதன் மூலம் அனைவருக்கும் சுய சிந்தனையை வளர்க்கும் தரமான கல்வி என்கிற குறிக்கோளுடன் செயல்பட்டு வருவதாக ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Education News, Genaral News Tags:தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் இந்தியாமுயற்சியில்!!!

Post navigation

Previous Post: Brainobrain’s Walkathon Garners Over 500 Participants in Support of Children’s Mental Health
Next Post: ‘கண்டதைப் படிக்காதே ‘ஒரு சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரில்லர்!

Related Posts

சென்னையில், கொசு உற்பத்திக்கு வழிவகுப்போருக்கு விதிக்கப்படும் அபராத தொகை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில், கொசு உற்பத்திக்கு வழிவகுப்போருக்கு விதிக்கப்படும் அபராத தொகை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. Genaral News
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் புதிய திரைப்படம் ! ! இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் புதிய திரைப்படம் ! ! Genaral News
Colors Tamil celebrates May Day with a lineup of insightful shows Colors Tamil celebrates May Day with a lineup of insightful shows Genaral News
ஸ்ரீ வெங்கடாசலபதி கோவில் திருமலை மேல் திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதி கோவில் திருமலை மேல் திருப்பதி Genaral News
கலைத்துறையில் சாதனை படைத்த அலர்மேல்வள்ளி, எஸ்.வி.சேகர், அரவிந்தாக்‌ஷன், ராதாகிருஷ்ணன் ஸ்தபதி ஆகியோருக்கு சென்னையில் நடைபெற்ற ப்ரவோக் கலைத்திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற ப்ரவோக் கலைத்திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. Genaral News
Viduthalai Part 1 Audio and Trailer Launch Genaral News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme