Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மனித புலன்களுக்கு அகப்படாத வகையில் நடக்கும் அமானுஷ்யக் கதைகளைத் திரைப்படத்தில் சரியாகச் சொன்னால் தமிழ் ரசிகர்கள் வெற்றி பெற வைப்பார்கள். இந்த நம்பிக்கையில் உருவாகி இருக்கும் படம் தான் கண்டதை படிக்காதே.

‘கண்டதைப் படிக்காதே ‘ஒரு சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரில்லர்!

Posted on June 13, 2023June 13, 2023 By admin

இது ஒரு சூப்பர் நேச்சுரல் ஹாரர் த்ரில்லர் திரைப்படமாகும்.இப்படத்தைஎழுதி இயக்கியிருப்பவர் ஜோதி முருகன். புல்லி மூவிஸ் சார்பில் எஸ். சத்யநாராயணன் தயாரித்துள்ளார்.

படம் பற்றி சத்யநாராயணனிடம்பேசிய போது,

“இப் படத்தின் கதை என்ன?சென்னையில் வேலைக்குச் செல்லும் ஒரு பெண் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறாள்.அதன் விசாரணை அதிகாரியான
இன்ஸ்பெக்டர் சிவராமன் புலனாய்வில் இறங்குகிறார்.மர்மத்தின் வேர் தேடி கொடைக்கானல் செல்கிறார். அங்கே போன பிறகு தான் தற்கொலைகளுக்கான திகிலான சம்பவம் அவருக்குத் தெரிகிறது.

மணிமாறன் ஓர் எழுத்தாளர். ஒரு திகில் கதையை எழுதி இருக்கிறார்.
அந்தக் கதையைப் படித்த அவரது பேத்தி நிஷா அதை இணையதளத்தில் பதிவிடுகிறாள்.அந்தக் கதையைப் படித்ததால் நிஷாவும் இறந்து போகிறாள்..

இணையதளத்தில் வந்த அந்தக் கதையைப் படிக்கும் வாசகர்கள் ஒவ்வொருவராக இறக்கிறார்கள்.
இந்தப் பட்டியலில் புலனாய்வு செய்யப் போன காவல்துறை அதிகாரியின் தங்கையும் அடக்கம் .அதனால் இதன் பின்னணியில் உள்ள மர்மத்தைத் தேடி விசாரணை செய்கிறார். அவர் அதற்காகக் கொடைக்கானல் செல்கிறார். அங்கே போய்ப் பார்த்தால் நிஷா இல்லை. அவர் நிஷாவின் பாட்டியைத் தான் சந்திக்கிறார்.

இதில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முயலும் போது இதன் பின்னணியில் ஒரு சாமியார் இருப்பது தெரிகிறது. அவரது கட்டுப்பாட்டில் உள்ள இறந்து போன ஒரு தம்பதிகளின் ஆவிகள் செய்யும் வேலை தான் அது. இணையத்தில் வெளிவந்தது அவர்களது சொந்தக் கதையாகும்.
அவர்களின் கதையைப் படிப்பவர்களை அந்த ஆவிகள் கொன்றுவிடுகின்றன என்று தெரிகிறது.

அந்த சாமியார் சிவராமனைக் கொல்ல முயல்கிறார். சிவராமன் அதை எப்படி எதிர்கொள்கிறார்? அந்த ஆத்மாக்களைத் தடுத்து எப்படி மக்களைக் காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்த கண்டதை படிக்காதே திரைப் படத்தின் கதை.

வளர்ந்து வரும் நட்சத்திர நடிகர்களால் படம் உருவாகியுள்ளது.

ஆதித்யா, சுஜி, சீனிவாசன், வைஷாலி, ஜெனி பெர்னாண்டஸ், ஆரியன், ராஜ் நவீன், சபிதா ஆனந்த் இவர்களுடன் தயாரிப்பாளர் சத்யநாராயணன் மணிமாறன் என்கிற எழுத்தாளர் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு இசை செல்வா ஜானகிராஜ், ஒளிப்பதிவு மஹிபாலன், படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ்,கலை முனி கிருஷ்ணா, பாடல்கள் ரவி தாசன்.

இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் சென்னை, செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ,படப்பை போன்ற பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.

படம் எடுக்கப்பட்டுள்ள முறையால் திரையிடப்பட்ட பல வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் பாராட்டப்பட்டுள்ளது . பதினொரு நாடுகளில் பல்வேறு விழாக்களில் திரையிடப்பட்ட இந்தப் படம் , திரையிடப்பட்டு 11 சர்வதேச விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது. ஒன்பது சர்வதேச விருதுகள் வென்றுள்ளது .

அப்படிப்பட்ட படம் வருகிற ஜூன் 30-ம் தேதி வெளியாகிறது ஒரு புதுமையான திகில் அனுபவத்திற்குத் தயாராகஇருங்கள்.

இப்படத்தை 9Vஸ்டூடியோஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

படம் ஜூன் 30-ல் வெளியாகிறது.

Genaral News Tags:'கண்டதைப் படிக்காதே 'ஒரு சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரில்லர்!, ஒன்பது சர்வதேச விருதுகள் பெற்ற 'கண்டதை படிக்காதே' திகில் படம்!

Post navigation

Previous Post: தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் இந்தியாமுயற்சியில்!!!
Next Post: “Sure, lets meet on 7th September”, Shah Rukh Khan gave his fans the wittiest replies in #AskSRK session

Related Posts

தமிழக அரசின் முத்திரை தீர்வு உயர்வு வீடு வாங்குபவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் தமிழக அரசின் முத்திரை தீர்வு உயர்வு வீடு வாங்குபவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் கிரெடாய் சென்னை தலைவர் சிவகுருநாதன் Genaral News
கேப்டன் திரை விமர்சனம் கேப்டன் திரை விமர்சனம் Genaral News
MG மோட்டர் நிறுவனம் சென்னையில் துவங்கியுள்ளது நிஜ உணர்வைத் தரும் இந்த டிஜிட்டல் ஸ்டூடியோவானது தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமோட்டிவ் துறைகளின் ஒருங்கிணைந்த அனுபவத்தை சிறந்த முறையில் வழங்கும் MG மோட்டர் நிறுவனம் சென்னையில் துவங்கியுள்ளது நிஜ உணர்வைத் தரும் இந்த டிஜிட்டல் ஸ்டூடியோவானது தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமோட்டிவ் துறைகளின் ஒருங்கிணைந்த அனுபவத்தை சிறந்த முறையில் வழங்கும் Genaral News
பிக்பாஸ் 3 படப்பிடிப்பு தொடக்கம்; ஜூலை நிகழ்ச்சி தொடங்குகிறது Genaral News
seeru-movie revirew சீறு திரைவிமர்சனம் Genaral News
RTI week celebrations - Walking the ramp by Transgenders to promote equality at Chennai Airport RTI week celebrations – Walking the ramp by Transgenders to promote equality at Chennai Airport Genaral News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme