மனித வாழ்வில் குழந்தைப் பருவத்தில் உண்டாகும் மோசமான அனுபவங்கள் எதிர்காலத்தை எப்படி சிதைக்கும் என்பதையும் பாமர மக்களும் எளிதில் புரியும்படியாக திரையில் போர் தொழில் திரைப்படம் சொன்ன விதம் மிகவும் சிறப்பு.
திருச்சியில் இளம் பெண்கள் கொடூரமாகவும் மர்மமான முறையில் கொலை செய்யபடுகிறார்கள், இந்த வழக்கு சிபிசிஐடி அதிகாரிகள் வசம் செல்கிறது எஸ்.பி லோகநாதன் (சரத்குமார்) தலைமையில் நடைபெறும் இந்த வழக்கு விசாரணையில் அவருக்கு உதவியாக பிரகாஷ் (அசோக் செல்வன்) இருவரும் சென்னையில் இருந்து திருச்சிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இவர்களால் கொலைகாரனைப் பிடிக்க முடிந்ததா என்பதே படத்தின் கதை.
கிரைம் திரில்லர் பாணியில் போர் தொழில் படத்தை கதையை ஆல்ஃப்ரெட் மற்றும் விக்னேஷ் ராஜா எழுதியிருக்கிறார்கள் இயக்குனர் விக்னேஷ் ராஜா பாமர மக்களும் எளிதில் புரியும்படியானா திரைக்கதையால் வெள்ளிதிரையில் சுவாரசியம் குறையாமல் ரசிக்கும்படியாக உள்ளது போர் தொழில் திரைப்படம்.பயந்த சுபாவம் கொண்ட அசோக் செல்வன் குடும்ப விருப்பத்திற்காக போலீஸ் அதிகாரி ஆகிறார்.
புதிய காவலர் அசோக் செல்வன், அனுபவம்மிக்க அதிகாரி சரத்குமார் இருவரும் தங்கள் பாணியில் இந்த வழக்கை விசாரிக்கும் விதம் அதிக சுவாரஸ்யம். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் இயக்கி இருப்பது திரையில் ரசிக்கவைக்கிறது .
வெகுளியான போலீஸ் அதிகாரியாக கவனம் ஈர்த்துள்ளார் அசோக் செல்வன். சின்ன சின்ன அசைவுகள், முகபாவனைகளில் நடிப்பு திறனை வெளிப்படுத்தி கதைக்கு உயிர்கொடுத்துள்ளார் . கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார் நாயகி நிகிலா விமல்.சரத்குமாருக்கு வழக்கமான போலீஸ் அதிகாரி கேரக்டர் என்றாலும் அனுபவம்மிக்க நடிப்பு திரையில் ரசிக்கவைக்கிறது.கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு மற்றும் ஜேக்ஸ் பிஜாய்யின் பின்னணி இசை படத்தின் திரைக்கதைக்கு உயிர் சேர்த்துள்ளது .