டக்கர் படம்
நடிகர் : சித்தார்த்
நடிகை : திவ்யன்ஷா கௌசிக்
இயக்குனர் : கார்த்திக் ஜி. கிரிஷ்
இசை : நிவாஸ் கே. பிரசன்னா
தயாரிப்பாளர்கள் : டிஜி விஸ்வ பிரசாத்
இயக்க நேரம் : 2 மணி 20 நிமிடங்கள்
சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டக்க.ர் இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்து இருக்கிறது. கார்த்திக் ஜி கிரிஸ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த கிரிஸ் திவ்யான்ஷா, யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். நீண்ட கால தயாரிப்பிற்கு பிறகு இந்த படம் இன்று வெளியாகியிருக்கிறது. டக்கர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது இந்த டக்கர் படம் .
கதாநாயகன் குணசேகரன் (சித்தார்த்) பணக்காரன் ஆக வேண்டும் என்று சென்னைக்கு வருகிறார். பின் குணசேகரன் வேலை தேடி அலைகிறார். ஆனால், அவர் அங்கு பல அவமானங்களை சந்திக்கிறார். இருந்தாலும், தன்னுடைய தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார். இதனால் கதாநாயகன் குணசேகரனுக்கு நிரந்தர வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். பின் எல்லா வேலைகளையும் விட்டு கடைசியாக இவர் பென்ஸ் கார் ஒன்றிற்கு டிரைவராக இருக்கிறார்.
கதாநாயகன் தன் பயத்தினள் தற்கொலை செத்துக்கொள்ள முயற்சிசெய்க்கிறார் அப்போது போதை பொருள், ஆள் கடத்தல், ரவுடிசம் ஆகிய அனைத்தும் கிடைக்கும் இடத்திற்கு வரும் கதாநாயகன் தன்னை கொள்ளும்படி ரவுடியிடம் கேட்க பின் கதாநாயகன் ரவுடிகளை அடித்து விட்டு அங்கிருந்த கார் ஒன்றை சித்தார்த் எடுத்துச் செல்கிறார். அந்த காரில் பணக்கார பெண் ஒருவர் கடத்தப்பட்டு இருக்கிறார். அவர்தான் படத்தின் கதாநாயகி. சித்தார்த் தன் லட்சியத்தை அடைந்தாரா என்பதே படத்தின் மீதி கதை.
படத்தில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்திருக்கிறார். முதல் பாதி முழுவதுமே நடிகர்களுடைய அறிமுகத்திலேயே சென்று விடுகிறது. இரண்டாம் பாதி விறுவிறுப்பாக படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர்.மேலும், படத்தில் வரும் யோகி பாபு நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு பலம் சேர்கிறது . நீண்ட இடைவெளிக்கு பிறகு சித்தார்த்தின் டக்கர் படம் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது டக்கர் படம்.நிவாஸ் பிரசன்னா வின் இசை திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது .