‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் கதை. சமகால அரசியல் சூழலை வைத்து இந்து – முஸ்லீம் ஒற்றுமையை இந்தப்படத்தில் பேச முயற்சித்துள்ளார் முத்தையா. ‘மாட்ட வைச்சு அரசியல் பண்ற சோலி வைச்சுக்காத. ஜமாத்தும் சபையும் ஓண்ணாதான் இருக்கும். அதை மாத்த முடியாது’ போன்ற கூர்மையான வசனங்கள் திரையில் ரசிக்கவைக்கிறது .
நாயகி தாய், தந்தையை இழந்த சித்தி இத்னானி, தன் அண்ணனின் மூன்று பெண் குழந்தைகளை தனியாக வளர்த்து வருகிறார். இவரை திருமணம் செய்து சொத்துக்களை அபகரிக்க அவரது முறைமாமன்கள் முயற்சி செய்கின்றனர்.இதனிடையே ஜெயிலில் இருக்கும் ஆர்யாவை, சித்தி இத்னானி நேரில் சந்திக்க முயற்சி செய்கிறார். சில காரணங்களால் ஆர்யாவை, சித்தி இத்னானியால் சந்திக்க முடியவில்லை. தன்னை சந்திக்க வந்த பெண் யார் என்று ஆர்யா தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார்..
இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
கிராமத்து கதாநாயகனாக நடித்திருக்கும் ஆர்யா கதாப்பாத்திரத்திற்கு பொருந்தியுள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் ஆர்யாவின் ஆக்ரோஷமும் துடிப்பும் திரையில் தெறிக்கவிட்டுள்ளார் . சித்தி இத்னானியை சுற்றியே கதை நகர்கிறது. கிராமத்து பெண்ணாக வரும் சித்தி அழகாக நடித்துள்ளார். படத்திற்கு தேவையான விஷயங்களை அழகாக கொடுத்து கவனம் பெறுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சித்தி இதானி ஆரம்பத்தில் வலுவான கதாபாத்திரமாக அறிமுகம் ஆனாலும், ஆர்யாவின் எண்ட்ரிக்குப் பிறகு டம்மியாக்கி ஓரம் கட்டப்படுகிறார்.
பிரபு, கே.பாக்யராஜ், விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், ரேணுகா, சிங்கம்புலி, தமிழ் என்று படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருந்தாலும் அனைவரும் அளவாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
வேல்ராஜின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.