கிராமத்தில் இருந்து சென்னை வருகிறார்கள் மூன்று இளைஞர்கள் அவர்களுக்கு தன்னை சுற்றிநடக்கும் பிரச்சனைக்கு தீர்வுகாண சென்னையில் வேலைதேடுகின்றனர் (நாயகர்கள் ஜெகா ,கே.ஆர்.ஜெயகிருஷ்ணா, உமேஷ் ) பணத்தால் மட்டுமே தங்களது பிரச்சனையை தீர்க்க முடியும் என்பதால், நேர்மையாக பணம் சம்பாதிக்க முயற்சிக்கும் இவர்கள் மூவரும் ஏமாற்றப்படுகிறார்கள். இதனால் மனம் நொந்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் இவர்களின் பிரச்சனையை அவர்களுக்கு சரியனவேலை கிடைத்ததா அவரகள் மூன்று பேரும் தனது பிரச்சனை எப்படி சரிசெய்தர்கள் என்பதே படத்தின் கதை ‘உன்னால் என்னால்’ படத்தின் மீதிக்கதை…
கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ஜெகா, கே.ஆர்.ஜெயகிருஷ்ணா மற்றும் உமேஷ் மூவரும் பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, கதாபாத்திரத்திற்கு உயிர்க்கடுத்து நடித்திருக்கிறார்கள். நாயகிகளாக நடித்திருக்கும் சஹானா, நிஹாரிகா, லுப்னா அமீர் ஆகியோர் தலா ஒரு பாடல், சில காதல் காட்சிகள் என்று திரையில் குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.டெல்லி கணேஷ், ஆர்.சுந்தராஜன், ராஜேஷ், ரவி மரியா ஆகியோரது அனுபவமான நடிப்பு கதைக்கு பலம் சேர்த்திருப்பதோடு, சில இடங்களில் (ரசிக்கவும்) சிரிக்கவும் வைத்துஇருக்கின்றனர்.
முதல் முறையாக வில்லி வேடத்தில் நடித்திருக்கும் சோனியா அகர்வால், குறைவான காட்சிகளில் வந்தாலும் திரையில் நிறைவாக நடித்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் கிச்சாஸின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பாடல் காட்சிகளை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருப்பவர், படம் முழுவதையும் தரமாக திரையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.ரிஸ்வான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.எழுதி இயக்கியிருக்கும் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா, ரியல் எஸ்டேட் துறையின் கருப்பு பக்கங்களையும், மனித நேயத்துடன் வாழ்வது தான் அறம் என்பதையும் கமர்ஷியலாகவும் காதல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையின் போக்கை மாற்றியமைத்திருக்கிறார் இயக்குநர்.