கழுவெத்தி மூர்க்கன் திரை விமர்சனம்
தயாரிப்பு – ஒலிம்பியா மூவீஸ்
இயக்கம் – சை கவுதம் ராஜ்
இசை – டி இமான்:
நடிப்பு – அருள்நிதி, சந்தோஷ் பிரதாப், துஷாரா விஜயன்
வெளியான தேது – 26 மே 2023.
நேரம் – 2 மணி நேரம் 31 நிமிடம்
நடிகர் அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனிஸ்காந்த், ராஜசிம்மன், யார்கண்ணன், பத்மன் என பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தை இயக்குநர் சை.கெளதம ராஜ் இயக்கியுள்ளார். ஒலிம்பியா மூவிஸின் அம்பேத் குமார் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேக்குப்பட்டி கிராமத்தில் உயர்சாதி என சொல்லப்படும் பிரிவைச் சேர்ந்த மூர்க்கசாமி(அருள்நிதி) மாடு முட்டி உயிருக்குபோராடும் மூர்க்கசாமியின் உயிரை பூமிநாதன் காப்பாத்துகிறார் பின்பு நண்பனாக இருக்கிறார் அதே கிராமத்தின் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பூமிநாதன் (சந்தோஷ் பிரதாப்). சாதியின் கோரங்கலின் இன்னல்களை கல்வியின் மூலம் விளக்கி தனது இளைஞர்களின் திறமையை வெளியில் கொண்டுவர பூமிநாதனுக்கு ஆதரவாக நின்று சொந்த சாதியினரையேஎதிர்க்கிறார் மூர்க்கசாமி. இந்நிலையில் அரசியல் கட்சியைச் சேர்ந்த முனியராஜ் (ராஜசிம்மன்) எப்படியாவது தேர்தலில் போட்டியிட தனது தலைமையிடமிருந்து சீட் பெற சாதி பலத்தைப் பயன்படுத்த
நினைக்கிறார்.
கிராமத்து இளைஞன் மூர்க்கனாக மீசையுடன் வலம் வருகிறார் அருள்நிதி . நண்பனுக்காகக் கோபப்படும் வேகம், காதல் காட்சிகளில் ரகளை, ஆக்ஷன் காட்சியில் கம்பீரமென மூர்க்கனாக திரையில் கதைக்கு உயிர் கொடுத்துள்ளார் அருள்நிதி,நாயகியாக துஷாரா விஜயன் குறும்புப் பார்வை, நக்கல் பேச்சு என தனது இயல்பான நடிப்பின் மூலம்என ரசிகர்களைக் கவர்கிறார், அருள்நிதிக்கு படம் முழுக்க ஆக்ஷன் கதைக்களமாக அமைந்திருக்கிறது கழுவேத்தி மூர்க்கன் ஊராட்சிமன்ற தலைவர் மகன் உயர்சாதி என சொல்லப்படும் பிரிவைச்
சேர்ந்தவராக வந்தாலும் ஒடுக்கப்படும் நண்பனுக்காக நிற்கும் இடங்களில் திரைக்கதைக்கு ஏற்ப நடிப்பைக்கொடுத்திருக்கிறார் அருள்நிதி.
அருள்நிதிக்கு இணையான கதாபாத்திரமாக வருகிறார் பூமிநாதனாக ஒளிரும் சந்தோஷ் பிரதாப். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக வரும் அவர்தனது மக்கள் இந்த இழிநிலையிலிருந்து முன்னேற வேண்டும் என மெனக்கெடும் இடங்களில் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்.