Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Sarath Kumar-Vidharth starrer “Samaran” First Schedule wrapped up

சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது!

Posted on May 25, 2023May 25, 2023 By admin

M360° ஸ்டுடியோஸ் ரோஷ் குமார் வழங்கும், பி திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது!

தனித்துவமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் நடிகர்கள் சரத்குமார் மற்றும் விதார்த் ஆகியோர் தங்களது சிறந்த நடிப்புத்திறன் மற்றும் பன்முகத்தன்மையை பல படங்கள் மூலம் நிரூபித்துள்ளனர். இதன் மூலம் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் பாக்ஸ் ஆஃபிஸ் கதாநாயகர்களாக வலம் வருகிறார்கள். இப்போது இருவரும் அறிமுக இயக்குநர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சமரன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இதனை M360° ஸ்டுடியோஸின் ரோஷ் குமார் தயாரித்துள்ளார்.

முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும், புதிய ஷெட்யூல் விரைவில் தொடங்கும் என்றும் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். முதல் ஷெட்யூல் சென்னையில் மணலி, காட்டுப்பாக்கம், மீனம்பாக்கம், வளசரவாக்கம், கிண்டி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த முதல் கட்ட படப்பிடிப்பின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று மணலியில் படமாக்கப்பட்ட ஆக்‌ஷன் அதிரடி காட்சிகள்.

சரத்குமார் மற்றும் விதார்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், இவர்களுக்கு எதிர் கதாநாயகனாக நடிக்க மலையாள நடிகர் ஆர். நந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ஜார்ஜ், மலையாள நடிகர் சித்திக், கும்கி அஸ்வின் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

ஒரு இராணுவ அதிகாரி மற்றும் IAS அதிகாரியைச் சுற்றி சுழலும் ஒரு அதிரடி-சஸ்பென்ஸ் கதையே ‘சமரன்’ படம். சூழ்நிலைகளால் கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கும் இவர்கள், ஒரு கிராமத்தில் மோசமான குற்றவாளிகள் குழுவால்
பல அப்பாவிகளின் உயிருக்கு ஆபத்தான நெருக்கடியை உருவாக்கும் சூழலை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது.

தொழில்நுட்பக் குழு விவரம்:

ஒளிப்பதிவு: குமார் ஸ்ரீதர்,
இசை: வேத் சங்கர் சுகவனம்,
கலை இயக்குநர்: ஸ்ரீமன் பாலாஜி,
பாடல் வரிகள்: மணி அமுதன்,
சண்டைப்பயிற்சி: விக்கி,
காஸ்ட்யூமர்: எஸ். நாக சத்யா,
தயாரிப்பு மேலாளர்: மணி தாமோதரன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா,
படங்கள்: பாலாஜி.

Cinema News Tags:சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது!

Post navigation

Previous Post: Sarath Kumar-Vidharth starrer “Samaran” First Schedule wrapped up
Next Post: மனிதநேயத்தோடு வாழ்வதுதான் சிறந்த அறம் ”உன்னால் என்னால்’

Related Posts

காற்றுக்குள்ளே - சமூக அரசியல் பேசும் இளம் பட குழுவினர்கள்.. காற்றுக்குள்ளே – சமூக அரசியல் பேசும் இளம் பட குழுவினர்கள்.. Cinema News
தேவி பிரசாத் இசையில் “ஓ பெண்ணே” பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார்!!! Cinema News
ஆதாரம் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! ஆதாரம் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! Cinema News
Vyjayanthi Movies Announces the launch of Vyjayanthi Music Vyjayanthi Movies Announces the launch of Vyjayanthi Music Cinema News
1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த ஷாருக்கானின் ‘ஜவான்’* Cinema News
The Grey Man எதையும் சாதிக்கும் மனிதன், இதோ “தி கிரே மேன்” தனுஷ் உங்களுக்காக Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme