Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு-indiastarsnow.com

செப்டெம்பர் மாதம் 30ம் தேதி மேல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்வது புழக்கத்திலிருந்து நீக்கம் !!!

Posted on May 19, 2023May 19, 2023 By admin

இன்று முதல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்திய ரிசர்வ் வங்கியின்” “Clean Note Policy” என்ற கொள்கையின் படி, புழக்கத்தில் இருந்து ₹2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2023 செப்டம்பர் 30 தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. எனவே, ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.

ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் இவ்வாறு வரவு வைக்க முடியும் அல்லது மாற்ற முடியும். எந்த ஒரு வங்கிக் கிளையிலும் பணத்தை மாற்றிக் கொள்ள முடியும். இதற்கான வாய்ப்பு வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும். 2,000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படவில்லை. அதேநேரத்தில், அவை திரும்பப் பெறப்படுகின்றன. வங்கிகளில் வரவு வைப்பது என்பது வழக்கமாக வரவு வைப்பது போன்றதே. இதில் கட்டுப்பாடுகள் கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கருப்புப் பணப் புழக்கத்தை மேலும் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

செப்டெம்பர் மாதம் 30ம் தேதி மேல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்வது புழக்கத்திலிருந்து நீக்கம்

Cinema News, Genaral News Tags:2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது!!!, இன்று முதல் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!!, இன்று முதல் ரிசர்வ் வங்கி அறிவிப்பு 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கம், செப்டெம்பர் மாதம் 30ம் தேதி மேல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்வது புழக்கத்திலிருந்து நீக்கம் !!!

Post navigation

Previous Post: நடன இயக்குநர் ஷெரீஃப் மற்றும் வின்சென்ட் அடைக்கலராஜ் இணைந்து வழங்கும் ஜூபாப் நடன-உடற்பயிற்சி செயலியின் அறிமுக விழா
Next Post: மலேசியாவில் பூஜையுடன் தொடங்கியது ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் புதிய படம்

Related Posts

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் விமர்சனம் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் விமர்சனம் Cinema News
ஜவான் வெளியீட்டுக்குப் பின்னர் வெற்றியை கொண்டாடிய செய்தியாளர் சந்திப்பில் ஜவானின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கு கொண்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர், மேலும் இந்நிகழ்வில், மீடியா மற்றும் ரசிகர்களுக்காக அனிருத்தும் ராஜகுமாரியும் பாடல் பாடினர் !* Cinema News
IIT Madras and Ashok Leyland received award for excellence in supporting education and skill Cinema News
Colors Tamil presents an exhilarating line up for audiences this Tamil New Year Colors Tamil presents an exhilarating line up for audiences this Tamil New Year Genaral News
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு. Genaral News
தமிழில் திரைப்படத் தயாரிப்பில் இறங்கும் தோனி என்டர்டெய்ன்மெண்ட் Dhoni Entertainment forays into mainstream film production with a Tamil film Genaral News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme