நடிகர்கள்:விஜய் சேதுபதி,மேகா ஆகாஷ்
இயக்கம்: வெங்கடகிருஷ்ண ரோகந்த்
கால அளவு:2 Hrs 1 Min
யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் ஆரம்பத்தில் ஒலிக்கும் விஜய் சேதுபதியின் வாய்ஸ் படத்தின் பல்வேறு போர்கள் குறித்து காட்டப்படும், மான்டேஜ் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன,
இலங்கை (ஈழத்) தமிழர்களின் உன்னத உணர்வுகளை வெள்ளித்திரையில் கான்போரை உருக வைத்து உள்ள படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இலங்கை போரில் சிக்கி குடும்பத்தை இழந்து தவிக்கும் இசை ஆர்வம் கொண்ட சிறுவன் ஒருவனை பாதிரியார் ஒருவர் லண்டன் செல்லும் ஒரு குழுவுடன் அனுப்பி வைக்கிறார். செக்போஸ்டில் இலங்கை போலீஸ் இடம் மாடிக்கொள்ளும் புனிதன் சிறைத்தண்டனைக்கு பின் கேரளா சென்று விடும் அவர், அதன் பிறகு பல வருடங்கள் அங்கேதான் இருக்கிறார். தனக்கு அடையாளம் வேண்டும் என்னும் ஒரே காரணத்துக்காக கிருபாநதி என்ற பெயரில் (தமிழகம்) கொடைக்கானலுக்கு வரும் ஹீரோ விஜய் சேதுபதி தன்னை மீண்டும் அகதி முகாமில் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை வைக்கிறார். அங்கு உள்ள ஒரு தேவாலயத்தில் செயல்பட்டு வரும் ஒரு இசைக் குழு மற்றும் பாதிரியார் (விவேக்) ஆகியோருடன் அவருக்கு அறிமுகம் ஏற்படுகிறது. அவர்களிடம் தன் பெயர் புனிதன் என்று கூறி அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி.
இசைக் குழுவில் இருக்கும் மெட்டில்டா (மேகா ஆகாஷ்) நாயகனின் மீது காதல் வயப்படுகிறார்.மெடில்டா மற்றும் இன்னொரு இசை கலைஞரான ஜெசி ஆகியோர் புனிதனின் உண்மையான அடையாளத்தை கண்டுபிடிக்கிறார்கள். அவர் புனிதன் அல்ல கிருபாநிதி என்கிற அகதி என்பதை கண்டுபிடிக்கிறார்கள்.
இரண்டாம் பாதியில் புனிதனின் கனகராணியை தேடி அலைவதை காட்டுகிறார்கள். லண்டன் இசை அரங்கில் தன் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பது தான் புனிதனின் கனவு. ஒரு அகதியாக புனிதன் படும் கஷ்டங்கள், அவர் ஏன் அகதியானார் என்பதை அழகாக காட்டியிருக்கிறார்கள்.தன் அடையாள பிரச்சனைக்கு இடையே புனிதனின் கனவு நிறைவேறுமா என்பதே கதை. அகதிகள் சந்திக்கும் பிரச்சனைகளை தைரியமாக சொல்கிறது யாதும் ஊரே யாவரும் கேளிர் படம்
இலங்கை (ஈழத்) தமிழர்களின் உன்னத உணர்வுகளை வெள்ளித்திரையில் கான்போரை உருக வைத்து உள்ளார் இயக்குனர் வெங்கடகிருஷ்ண ரோகந்த்