நடிகர்கள்: நாக சைதன்யா,க்ரித்தி ஷெட்டி,அரவிந்த்சாமி,சரத்குமார்
இயக்கம்: வெங்கட் பிரபுசினிமா
ஒருநாள் முழுக்க தன் கஸ்டடியில் இருக்கும் வில்லனை சாகாமல் பார்த்துக் கொள்ளும் ஹீரோவைப் பற்றிய கதை கஸ்டடி.
ஆந்திராவின் ஒரு சிறிய நகரத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றுபவர் சிவா (நாகசைதன்யா). ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதற்காக முதலமைச்சரின் வாகனத்தையே மறிக்கும் அளவுக்கு துணிச்சலானவர். அவரது காதலி ரேவதி (கீர்த்தி ஷெட்டி). இருவரது காதலும் ரேவதியின் வீட்டுக்கு தெரியவருவதால் ரேவதிக்கு அவசர அவசரமாக திருமணத்துக்கு ஏற்பாடு நடக்கிறது.
நாகசைதன்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். பிரியாமணி, சரத்குமார் ஆகியோரின் நடிப்பு நிறைவை தருகிறது. ஒரு நாள் இரவு ராஜு(அரவிந்த் சாமி) மற்றும் ஜார்ஜ்(சம்பத் ராஜ்) ஆகியோர் சிவா வாழ்வில் வருகிறார்கள். ராஜு குற்றவாளியாக இருந்தாலும் அண்ணன் சவுக்கு காரணமா முக்கிய சாட்சி ராஜுவை மறுநாள் காலை பெங்களூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சம்பத்தின் கோரிக்கைக்கு ஏற்கும் நாயகன், அங்கு வரும் ராஜுவின் ஆட்களை அடித்துப் போட்டு விட்டு அங்கிருந்து ராஜுவை அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். இந்த பயணத்தில் வீட்டிலிருந்து ஓடி வரும் கீர்த்தி ஷெட்டியும் இணைகிறார். அரசாங்கத்தையே தனக்கு பின்னால் வைத்திருக்கும் ராஜுவை நீதிமன்றத்தில் நாகசைதன்யா ஆஜர்படுத்தினாரா? இதுதான் கஸ்டடி சொல்ல வரும் கதை.
இளையராஜா – யுவன் கூட்டணி மற்றும் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரும் போட்டி போட்டு உழைத்துள்ளனர். ராஜா மற்றும் யுவன் பின்னணி இசையில் மிரட்டினாலும் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. சேஸிங் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரின் உழைப்பு தெரிகிறது.
ஆக்ஷன், எமோஷன் கலந்த படம் தான் உங்களுக்கு பிடிக்கும் என்றால், கண்டிப்பாக கஸ்டடியை பார்க்கவும்.