தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஃபர்ஹானா. இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் ஃபர்ஹானா. இருக்கிறார். எஸ்.ஆர். பிரபு இந்த படத்தை தயாரித்திருக்கிறா
ஃபர்ஹானா கதையை அழகாக திரையில் காட்டியிருக்கிறார் நெல்சன் வெங்கடேசன். முஸ்லீம் பெண்ணான ஃபர்ஹானா(ஐஸ்வர்யா ராஜேஷ்) ஐந்து நேரம் தொழுபவர். படித்த பெண்ணான அவர் கணவர், பிள்ளைகள் என கறாரான இஸ்லாம் குடும்பப் பெண் ஃபர்ஹானா, குடும்ப கஷ்டத்தை போக்க குடும்பத்தாரிடம் அனுமதி பெற்று கால் சென்டரில் வேலைக்கு சேர்கிறார்.
குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்ட கவலையில் இருக்கும் ஃபர்ஹானாவுக்கு அதே நிறுவனத்தின் வேறு பிரிவில் சேர்ந்தால் கூடுதல் பணம் கிடைக்கும் என்பது தெரிய வருகிறது. இதையடுத்து அந்த பிரிவுக்கு மாறுகிறார்தனியாக உணரும், செக்ஸ் பற்றி பேசும் யார், யாருடனோ தினமும் பேச வேண்டியது தான் அந்த புது வேலை என்பது ஃபர்ஹானாவுக்கு தெரிய வருகிறது. கண்டபடி பேசுபவர்களுக்கு மத்தியில் தன் வித்தியாசமான அணுகுமுறையால் ஒருவர் ஃபர்ஹானாவை கவர்கிறார்.
கொஞ்சம் வித்தியாசமாக பேசும் அவரிடம் மனதை பறி கொடுக்கிறார் ஃபர்ஹானா. இதனிடையே அங்கு வேலை செய்யும் பெண் ஒருவர் இப்படி போன் பேசிய ஒருவருடன் சென்று உயிரை பறிகொடுக்கிறார். இதைப்பார்த்து பயந்து போகும் ஃபர்ஹானா அவர் மீது வைத்த பிரியத்தை அப்படியே கட் செய்து எதுவும் வேண்டாம் என்று முடிவு செய்கிறார். ஆனால் கால் செய்தவர் விடுவதாக இல்லை. அதன் பின்னர் என்ன ஆனது ஃபர்ஹானாவின் பிரச்சனைகள், குழப்பங்களை சஸ்பென்ஸுடன் அழகாக கொடுத்திருக்கிறார் நெல்சன். ஃபர்ஹானாவின் உலகத்தை தன் கேமரா மூலம் சிறப்பாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
ஃபர்ஹானாவின் குடும்ப பின்னணி, நிறுவன விதிகளை மீறி அவர்கள் இருவரும் சந்திக்க முடிவு எடுப்பதால் பிரச்சனை ஏற்படுகிறது.
ஃபர்ஹானாவாகவே வாழ்ந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். திரையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரியவில்லை இஸ்லாமிய பெண் ஃபர்ஹானா மட்டும் தான் தெரிகிறார். ஃபர்ஹானாவுக்கு ஏற்படும் குழப்பங்கள், பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடிகிறது.
ஃபர்ஹானாவின் கணவராக வரும் ஜித்தன் ரமேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்திற்கு பெரிய பிளஸ் பாயிண்டாக அமைந்திருக்கிறது.