கதாநாயகன் சூரசங்கு (விமல்) தனது தங்கை மாநிலத்தின் முதல் மாணவியாக பன்னிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் தேர்வு ஆகிறாள். அண்ணனின் ஆசை மருத்துவர் ஆகவேண்டும் ஆனால் தங்கை அன்னணை விட்டு பிரிய மனமில்லை. அதனால் அந்த கிராம மக்கள் உதவியுடன் கல்லூரி இருக்கும் பகுதி சென்று அங்கே ஆட்டோ ஓட்டி கொண்டு தங்கை மருத்துவ படிப்பை கவனித்துகொண்டு இருக்கிறார். இந்நிலையில், கல்லூரியில் தங்கைக்கு நிகழும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார் ஆட்டோ ஓட்டுநர் சூரசங்குவின் தங்கையான மருத்துவக் கல்லூரி மாணவி கலை. குற்றவாளியை நீதிமன்றத்தில் வைத்து கொடூரமாகக் கொலை செய்கிறார் ஒரு மர்ம நபர். அந்த மர்ம நபர் சூரசங்காக இருக்கலாம் எனச் சந்தேகித்து, அவரைக் கைது செய்கிறது காவல்துறை. போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் அவரை நிரபராதி என விடுதலை செய்கிறது. அதைத் தொடர்ந்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகள் வரிசையாகக் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள். அந்தக் கொலைகளைச் செய்வது யார், அந்தக் கொலையாளிக்கும் சூரசங்குவிற்கும் உள்ள தொடர்பு என்ன, சூரசங்குவின் தங்கையைக் கொன்றது யார் போன்ற கேள்விகளுக்கு, த்ரில்லிங்கான திரைக்கதையில் குலசாமி .
விமல் தனது பங்கிற்க்கு நடிப்பை கொடுத்துள்ளார் விமலலை காமெடி படத்தில் பார்த்த நமக்கு இந்த படத்தில் கதைக்கு உயிர்கொடுத்து நடித்து இருக்கிறார் விமல். கதநாயகி தன்யா ஹோப் நடிப்பு அருமை. படத்தின் இசை மாகாலிங்கம். பிண்ணணி இசையை படத்திற்க்கு ஏற்ப அமைத்துள்ளார். மற்ற கதபாத்திரங்களை பார்த்தால், போலிஸ் அதிகாரியாக முத்துபாண்டி வில்லனாக ஜனனி பாலு , கல்லூரி பேராசிரியையாக வினோதினி தங்களது நல்ல நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர்.