தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் 30 /4 /2023 அன்று ஞாயிற்றுக்கிழமை சென்னை அடையார் சத்யா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த தேர்தலில் ரஜினி கமல் போன்ற முக்கிய தயாரிப்பாளர்கள் உட்பட 1111 பேர் வாக்களித்தனர்.
இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு முரளி ராமசாமி மற்றும் மன்னன் இருவரும் போட்டியிட்டனர்.
இந்த முறை இரண்டு அணிக்கும் இடையே கடும் போட்டியாக இருந்தது தான் நிதர்சனம் . நலன் காக்கும் அணியின் சார்பாக தலைவராக போட்டியிட்ட முரளி ராமசாமி 615 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட உரிமை காக்கும் அணியின் சார்பாக தலைவராக போட்டியிட்ட மன்னன் அவர்கள் 482வாக்குகள் பெற்றுள்ளார்.133 வாக்குகள் அதிகமாக பெற்ற முரளி ராமசாமி வெற்றி பெற்று மீண்டும் இரண்டாவது முறை சங்க தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
இந்தத் தேர்தலில் இரண்டு அணியில் இருப்பவர்களும் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து ஒரு சட்டமன்ற இடைத் தேர்தலை மிஞ்சும் அளவிற்கு இருந்தது. இந்த தேர்தலில் ஒரு வாக்காளருக்கு குறைந்தது இரண்டு அணியினரும் ஐம்பதாயிரம் வரை கொடுத்துள்ளதாக தகவல். எத்தனை கோடி கொடுத்தாலும் தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் 150 தயாரிப்பாளர்கள் தான் தங்கள் சங்கத்தின் தலைவரை நிர்ணயித்து தேர்ந்தெடுத்து வந்துள்ளனர். அந்த 150 தயாரிப்பாளர்கள் யாரிடமும் எந்த எதிர்பார்ப்பையும் நம்பி இல்லாத தயாரிப்பாளர்கள்.
தற்போது நடந்த தேர்தலிலும் 133 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் சங்கத்திற்கான தலைவரை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதுதான் நிதர்சனம்.
அதேபோல் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் 5ஸ்டார் கதிரேசன் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சந்திர பிரகாஷ் ஜெயின் மூன்று பேரும் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறை பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த தேர்தலில் முதல் முதலாக துணைத் தலைவருக்கு போட்டியிட்ட கல்பாத்தி அகோரம் அர்ச்சனா மற்றும் லைக்கா நிறுவனத்தைச் சார்ந்த தமிழ் குமரன் அவர்கள் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
துணைத் தலைவர்களுக்கு போட்டியிட்ட தமிழ் குமரன் மற்றும் அர்ச்சனா
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடந்த இரண்டு வருடமாக இருந்த தலைவர் மற்றும் செயலாளர் மீது ஒரு சில குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் வந்த நிலையில் தற்போது தேர்தலில் அதை பிரதிபலிக்கும் வகையில் 482 தயாரிப்பாளர்கள் தங்களது வாக்கை மன்னன் அவர்களை ஆதரித்து வாக்களித்துள்ளனர் என்பதுதான் நிதர்சனம். ஆகவே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள அனைத்து தயாரிப்பாளர்களும் தலைவர் செயலாளர்கள் மீது எந்த விமர்சனம் மற்றும் குற்றச்சாட்டுகள் வைக்காமல் பார்த்துக் கொள்வது தற்போது வெற்றி பெற்றுள்ள தலைவர் செயலாளர் பொருளாளர் மூன்று பேரின் கடமையாகும்.!வெற்றி பெற்ற அனைவரின் திரைப்படத் துறை பணி சிறக்க வாழ்த்துக்கள்