தங்கலான் படத்திற்காக முடி வளர்த்தார் விக்ரம் அதே ஹேர்ஸ்டைலில் பொன்னியின் செல்வன் 2 பட விளம்பர நிகழ்ச்சிகளில் கொண்டை, கோட் சூட் என சூப்பர் ஸ்டைலிஷாக வருகிறார் சீயான் விக்ரம். பொன்னியின் செல்வன் 2 டூர் பற்றிய புகைப்படங்கள், வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் சீயான் விக்ரம்.
மணிரத்னம் பற்றி விக்ரம் கூறியதாவது, கென்னி உன்னை வைத்து 100 படங்கள் பண்ண விரும்புகிறேன் என ராவணன் படப்பிடியின்போது மணி சார் என்னிடம் சொன்னார். 100 படங்களுக்கு ரொம்ப காலம் ஆகும். அதனால் தயவு செய்து விரைவில் இரண்டாவது படத்தை கொடுங்க சார் என்றேன். தற்போது அவர் இயக்கத்தில் இரண்டாவது படத்தில் நடித்தது சந்தோஷமாக இருக்கிறது என்றார்.
ஆதித் கரிகாலன் ஒரு பெரிய போர் வீரன். பயமறியாதவர். மணிமுடி, ராஜ வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டு போருக்கு போவார். தன் காதலை மறக்க முயற்சி செய்வார். ஆனால் இறுதியில் காதலிக்காக எதையும் செய்ய விரும்புவார். ராவணன் படத்தில் நான் வெளிப்படுத்தியே அதே எமோஷன் தான். ஆனால் பொன்னியின் செல்வன் 2 படத்தில் என் கதாபாத்திரம் வந்திருக்கும் விதம் மக்களுக்கு பிடிக்கும் என்றார்.