மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி அவர்களின் சம்பள விபரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
1*ஆதித்த கரிகாலன் (ரூ. 12 கோடி சம்பளம்)
பொன்னியின் செல்வன் 2 படத்தில் யாருக்கு அதிக சம்பளம்னு தெரியுமோ?
முடி இளவரசர் ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கும் விக்ரமுக்கு தான் அதிகபட்சமாக ரூ. 12 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறார்கள்.
நந்தினி (ரூ. 10 கோடி)
2*ஐஸ்வர்யா ராய் நந்தினி ( ரூ. 10 கோடி)
ஐஸ்வர்யா ராய் பச்சன் தான். ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி கொடுத்திருக்கிறார்களாம்.
3*வந்தியத்தேவன் (ரூ. 5 கோடி)
உயிர் உங்களுடையது தேவி என்கிற ஒத்த வசனத்தை வைத்துக் கொண்டு போகும் இடமெல்லாம் ரசிகைகளை கவர்ந்து வரும் வந்தியத்தேவன் என்கிற கார்த்திக்கு ரூ. 5 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறார்களாம்.
4*பொன்னியின் செல்வன் (ரூ. 3 கோடி )
பொன்னியின் செல்வனாக நடித்திருக்கும் ஜெயம் ரவிக்கு ரூ. 3 கோடி கொடுத்திருக்கிறார்களாம்.
5*குந்தவை(ரூ. 3 கோடி)
அவரின் சகோதரி குந்தவையாக நடித்துள்ள த்ரிஷாவுக்கும் ரூ. 3 கோடி தான் சம்பளம்.
6*பூங்குழலி (ரூ. 1.5 கோடி)
சமுத்திரக்குமாரி அதாங்க பொன்னியின் செல்வன் மீது செம அன்பு வைத்திருக்கும் பூங்குழலி ஐஸ்வர்யா லட்சுமிக்கு ரூ. 1.5 கோடி சம்பளமாம்.
7*வானதியாக(ரூ. 2.5 கோடி)
பொன்னியின் செல்வனை காதலிக்கும் வானதியாக நடித்திருக்கும் சோபிதா துலிபாலாவுக்கு ரூ. 2.5 கோடி சம்பளம் .