யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்டோரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள யானை முகத்தான் படத்தின் சுடசுட விமர்சனம்
மலையாள படத்தின் தமிழ் ரீ-மேக்காக உருவாகியுள்ள படம், யானை முகத்தான் இயக்கிய ராஜேஷ் மிதில்லா, முதல் முறையாக நடிகர் யோகி பாபுவுடன் கைக்கோர்த்து தமிழில் களமிறங்கியுள்ளார். இதில் ரமேஷ் திலக், ஊர்வசி மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில், தெய்வத்திற்கும் மனிதனுக்குமான பிரச்சனையை காமெடி கதை வடிவில் கூற முயற்சித்துள்ளார் இயக்குநர். அந்த முயற்சி வெற்றி பெற்றதா? வாங்க விமர்சனத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆரம்பித்து ராஜஸ்தான் வரை ரசிகர்களை இழுத்துச்சென்று கதை ஊரெல்லாம் கடன் வாங்கி ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தும் பொறுப்பற்ற இளைஞர் கணேசன் (ரமேஷ் திலக்). விநாயகர் பக்தரான இவர், தனது அனைத்து பிரச்சனைகளையும் நீயே தீர்த்து வைக்க வேண்டும் என கடவுளிடம் தினமும் வேண்டுகோள் வைக்கிறார். ஒரு நாள், விநாயகர் சிலை, புகைப்படம் எதுவும் கணேசனின் கண்களுக்கு தெரியாமல் போகிறது. துடிதுடித்து போன கணேசிற்கு யோகி பாபு வடிவில் நேரில் காட்சி தருகிறார், காமெடியாக விடையளிக்க முயற்சித்து கோட்டை விட்டிருக்கிறார், இயக்குநர்.