அகல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) பேராசை கொண்ட அம்மா லட்சுமி (தீபா சங்கர்), பேச இயலாத அக்கா தேன்மொழி (லட்சுமிப் பிரியா), ஆகியோருடன் வறுமை வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் அகல்யா. இந்நிலையில் அவருக்கு நகைக்கடை மூலம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்று பரிசாகக் கிடைக்கிறது. இதை வைத்து தனது சகோதரி திருமணத்தை நடத்தி விட நினைக்கிறார் அகல்யா. அதற்கான ஏற்பாட்டில் இருக்கும்போது, வீட்டை விட்டு வெளியேறிய அண்ணன் துரை (கருணாகரன்), கார் தனக்கே சொந்தம் என்று வருகிறார். விவகாரம் காவல் நிலையம் செல்கிறது. காரின் உண்மையான உரிமையாளர் யார்? கருணாகரன் ஏன் அதை உரிமை கொண்டாடினார்? காவல் துறை என்ன நடவடிக்கை எடுத்தது என்பது மீதி கதை.
அதிர்ஷ்ட கார், காருக்காகவே லட்சுமிப் பிரியாவைத் திருமணம் செய்ய சம்மதிக்கும் சாரா, எதிர்பாராத விபத்து, காருக்குள் ஒரு சடலம், காரை கைப்பற்றத் துடிக்கும் அண்ணன் மற்றும் மோசடி மச்சான், பாலியல் நோக்கம் கொண்ட காவல் ஆய்வாளர் என பரபரக்கவும் படபடக்கவும் வைக்கிற காட்சிகள் சில இடங்களில் சிரிப்பையும் சிலிர்ப்பையும் உருவாக்குகின்றன திரைக்கதை.
அங்கிருக்கும் இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யாவிடம் தவறாக நடக்கிறார். காரை வைத்து அக்காவின் திருமணத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் நடத்தினாரா? போலீஸ் ஸ்டேஷனிலிருந்து காரை மீட்டாரா, தன்னிடம் தவறாக நடக்க முயன்ற போலீஸ் அதிகாரிக்கு எப்படி பாடம் புகட்டுகிறார் என்பது மீதி கதை. ஒரு படத்தில் ஹீரோ இருந்தால் என்னவெல்லாம் செய்வாரோ அதை அனைத்தையும் ஐஸ்வர்யா ராஜேஷ் செய்கிறார். அப்பாவியாக ஆரம்பித்து அதிரடியாக மாறும் ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது. குடும்பத்தின் ஏழ்மையை கண்களால் கடத்துவதாகட்டும், ஆஸ்பத்திரியில் அப்பாவி போல் முகத்தை வைத்துகொண்டு பண்ணும் காமெடியாகட்டும், வம்பு பண்ணுபவர்களை வெளுத்துக்கட்டுவதாகட்டும் எல்லா இடங்களிலும் அசத்தியிருக்கிறார். அக்காவாக வரும் லஷ்மி பிரியா வாய் பேச முடியாவிட்டாலும் கண்களால் பேசி கவர்ந்து விடுகிறார். அம்மாவாக வரும் தீபா சங்கர் வெகுளித்தனமான கேரக்டரில் பிரமாதம். மிக்ஸிக்காக ஏங்குவது, மகளின் வீரத்தை எண்ணி பெருமைப்படுவது என்று எல்லா இடங்களிலும் நிறைவான நடிப்பைக் கொடுத்துள்ளார். அண்ணனாக வரும் கருணாகரன் வழக்கம்போல் யதார்த்த நடிப்பை மிகையில்லாமல் வழங்கியிருக்கிறார். அடாவடி கேரக்டருக்கு மைம்கோபி கச்சிதம். போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சுனில், மாப்பிள்ளையாக வரும் சாரா, உதவி இயக்குனராக வரும் சதீஷ் கிருஷ்ணன் என அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்கள். நகைச்சுவையை வாரி வழங்கியுள்ளார் ரெடின் கிங்ஸ்லி. போலீஸ் ஸ்டேஷனில் அவர் பண்ணும் அலப்பறைக்கு தியேட்டரில் சிரிப்பலை.