Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

ஜி டி நாயுடுவின் சுயசரிதையில் நடிக்கும் மாதவன்

Posted on April 6, 2023April 6, 2023 By admin

தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக மாதவன் நடிக்கிறார்.‌

தமிழ் திரையுலகில் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், தற்போது உலகளவில் பிரபலமான தமிழக விஞ்ஞானி ஜி. டி நாயுடு நாயுடுவின் சுயசரிதையையும், அவரது சாதனைகளையும் தழுவி பெயரிடப்படாத புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் இதற்காக ஜி. டி. நாயுடு பெயரில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களுடன், மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறது.

நடிகர் மாதவன் தற்போது இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் தயாராகி வரும் படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து ஜி. டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றில் மாதவன் நடிக்கிறார்.

இதனிடையே நடிகர் மாதவன் இந்திய வானவியல் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ‘தி ராக்கெட்டரி நம்பி எஃபெக்ட்’ எனும் திரைப்படத்தை எழுதி, இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Cinema News Tags:ஜி டி நாயுடுவின் சுயசரிதையில் நடிக்கும் மாதவன்

Post navigation

Previous Post: *தற்கொலை எண்ணத்தை மாற்றும் விதமாக உருவாகியுள்ள ‘யோசி’ நாளை (ஏப்-7) வெளியாகிறது*
Next Post: 101 DESTINATION WEDDINGS COST OF ONE CRORE FOR ECONOMICALLY DISADVANTAGED & DIFFERENTLY ABLED HELD AT MAHABALIPURAM

Related Posts

*ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை - ஒரே நாளில் வெளியாகி சாதனை படைக்கும் “பிதா” திரைப்படம்;* *ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை – ஒரே நாளில் வெளியாகி சாதனை படைக்கும் “பிதா” திரைப்படம்;* Cinema News
Iraivan worldwide release on September 28th. Jayam Ravi-Nayanthara starrer Iraivan worldwide release on September 28th. Cinema News
Herewith i forward the press release pertaining to "NTR 31" Herewith i forward the press release pertaining to “NTR 31” Cinema News
இனியா நடிப்பில் சமூக அக்கறை கொண்ட அருமையான படைப்பாக உருவாகியுள்ள கமர்ஷியல் திரைப்படம் ‘சீரன்’. இனியா நடிப்பில் சமூக அக்கறை கொண்ட அருமையான படைப்பாக உருவாகியுள்ள கமர்ஷியல் திரைப்படம் ‘சீரன்’. Cinema News
ஏஜென்ட் கண்ணாயிரம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு ! “ஏஜென்ட் கண்ணாயிரம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு ! Cinema News
Herewith i forward the press release pertaining to "Double iSmart " Herewith i forward the press release pertaining to “Double iSmart “ Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme