“தசரா” தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பாண் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.தெலுங்கு திரையுலகில் இருந்து வெளியான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் போன்ற பான் இந்தியா படங்கள் வரிசையில் தற்போது புதிதாக இணைந்துள்ள திரைப்படம் தான் தசரா. இப்படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா என்கிற அறிமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தில் நானியும், கீர்த்தி சுரேஷும் ஜோடியாக நடித்துள்ளனர். இதற்கு முன் நேனு லோக்கல் என்கிற படத்தில் ஜோடியாக நடித்த இவர்கள் தற்போது தசரா மூலம் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர்.
நானி ரக்ட் பாயாக வருகிறார். கேஜிஎஃப் படத்தில் தங்க சுரங்கம் கதை என்றால் இது முழுக்க முழுக்க நிரக்கரி சுரங்கத்தை சுற்றிய கதை. அதனால் அந்த ஊரே கருப்பு நிற புழுதியால் நிறைந்திருப்பதால் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் என படத்தில் நடித்துள்ள பலருக்கும் இயக்குநர் கரியை அள்ளி முகத்தில் பூசி நடிக்க வைத்திருக்கிறார்.
கீழத்தெருவை சேர்ந்த நானியும் மேலத்தெருவை சேர்ந்த தீக்ஷித் ஷெட்டியும் நண்பர்களாக உள்ளனர். சிறு வயதில் இருந்தே கீர்த்தி சுரேஷை காதலித்து வரும் நானி, தனது நண்பன் தீக்ஷித் ஷெட்டி கீர்த்தி சுரேஷ் மீது ஆசைப்படும் நிலையில், நட்புக்காக காதலை விட்டுக் கொடுக்கிறார்.
கீர்த்தி சுரேஷும் ஹீரோவை விட்டு அவர் நண்பரை திருமணம் செய்து கொண்டு செல்ல, உடனடியாக தீக்ஷித் ஷெட்டியை வில்லன் ஆட்கள் தீர்த்து கட்டுகிறது.
தனது நண்பனை கொன்றவனை கொல்ல அதுவரை சரக்கு அடித்தால் மட்டுமே நானி முழு நேர சக்திமானாக மாறி சகலரையும் கத்தியால் கிழித்து எறிவதும். இறுதியில் தனது காதலியான கீர்த்தி சுரேஷை கரம் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
படத்தில் மிரட்டல் வில்லனாக டாம் ஷைன் சாக்கோ தனக்கே உரித்தான முக பாவணைகளை காட்டி மிரட்டுகிறார். அவரது அப்பாவாக சமுத்திரகனி நடித்துள்ளார். மனைவியாக பூர்ணா நடித்துள்ளார்.ஆக்ஷன் காட்சிகளில் நானி அடித்து தூள் கிளப்பும் நிலையில், காதல் காட்சிகளில் கீர்த்தி சுரேஷ் நடித்து தூள் கிளப்புகிறார். தெலுங்கு டப்பிங் படமான தசரா பான் இந்தியா படமாக ஜொலிக்கவில்லை. பல இடங்களில் தெலுங்கு பல்லை காட்டுவதை இயக்குநர் தவிர்க்கவே இல்லை. அந்த பாரில் உள்ள சில்க் போஸ்டருக்காகவே கலை இயக்குநருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் என தியேட்டரில் ரசிகர்கள் கூச்சலிடுகின்றனர்.சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் அருமையாக அமைந்துள்ளன. ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள் என அனைத்துமே படத்திற்கு பலமாகவே உள்ளன.