தாதா குருவியிடம் எடுபிடி வேலைக்கு சேரும் ராஜன் (அர்ஜை) ஒரு கட்டத்தில் தாதாவை கொன்று விட்டு தானே ரவுடி ஆவதுடன் கில்லர் குருவி ராஜனாகிறான்.காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக இருப்பதோடு, தன்னை பற்றிய தகவல்கள் வெளி உலகத்திற்கு முழுமையாக தெரியாமல் வாழும் குருவி ராஜன், எளிமையான இரண்டு பேரால் கொல்லப்படுவதோடு, அவனது சாம்ராஜ்யத்தை அழித்து அவனையும் அழித்த அந்த இரண்டு சாமனியர்கள் யார் என்பதை சுவாரஸ்யமாகவும் சொல்வதே ‘ஷூட் தி குருவி’ ஆக்ஷன் டெம்போ வுடன் சொல்கிறது.
.
நடுரோட்டில் போலீசை சுட்டு தள்ளிவிட்டு ஆர்ப்பாட்டம் செய்யும் குருவி யை அப்பாவி குணம் கொண்ட இளைஞன் அடித்து விட்டு தப்பிக்கி றான். அவனுக்கு நண்பன் ஒருவன் அடைக்கலம் தர அந்த இடத்துக்கு வரும் குருவி ராஜன், அப்பாவி யை கொல்ல சுடுகிறான் அதன் பிறகு நடப்பது என்ன என்பதை கிளைமாக்ஸ் பிளாக் காமெடி பாணியில் ஒரு ரவுடியிசத்தை சொல்கிறது படம். பல படங்களில் வில்லன் வேடங் களில் நடித்தி ருக்கும் அர்ஜை இப்படத்தில் பிரதான வேடமான குருவி ராஜனாக நடித்திருக்கிறார்.
அர்ஜை கண்டாலே எல்லோரும் நடுங்கும்போது அப்பாவி இளைஞ னாக நடித்தி ருக்கும் ஆஷிக் உசைன் குருவி ராஜனை நேரில் பார்க்கும்போதும் பயப்படாமல் கோவை பாஷை யில் பேசி காமெடி பேச்சை கட்ட விழ்ப்பது சிரிப்பை வரவழைக்கிறது.
ஆஷிக்கிற்கு அடைக்கலம் தரும் ஷா ராவும் தன் பங்கிற்கு காமெடி செய்கிறார்
சொல்ல வந்த விஷயத்தை ஆக்ஷன் , கமர்ஷி யல் அம்சங் களுடன் சொல்லி யிருக்கிறார் இயக் குனர் மதிவாணன்
பேராசிரியர் வேடத்தில் நடித்திருக்கும் ராஜ்குமார்.ஜி வயதான வேடத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
சுரேஷ் சக்ரவர்த்தி, மணி வைத்தி, சாய் பிரசன்னா, ஜிப்ஸி நவீன் என அனைத்து நடிகர்களும் அளவான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரண்டன் சுஷாந்த் ஒரு அறைக்குள் வைத்தே பெரும்பாலான படத்தை முடித்திருக்கிறார்.