Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டத்தில்

Posted on March 11, 2023 By admin

பெண் சாதனையாளர்களை கௌரவிப்பது, சமூகத்திற்கான அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பது மற்றும் கொண்டாடுவது போன்றவை அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் எதிர்கால சந்ததியினரை ஊக்குவிப்பதன் ஒரு முக்கிய பகுதியாகும். இந்த பெண்களை கெளரவிப்பதன் மூலம், அவர்களின் சாதனைகளை நாங்கள் கொண்டாடுவது மற்றும் அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் வெற்றிகள் மற்றும் போராட்டங்களிலிருந்தும் நாங்கள் கற்றுக்கொள்கிறோம்.

இன்று வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் Pro Chancellor டாக்டர். ஆர்த்தி கணேஷ் மற்றும் வேல்ஸ் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷனின் Vice President டாக்டர். ப்ரீத்தா கணேஷ் ஆகியோருடன், வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டத்தில் இதுபோன்ற சக்தி வாய்ந்த பெண்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று வேல்ஸ் வளாகத்தில் கீழேயுள்ள பெண்களுக்கு இந்த ஆண்டுக்கான “VELS Women Achiever Award” வழங்கப்பட்டது.

திருமதி பிரியா ராஜன் – மேயர், சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு

திருமதி ரம்யா பாரதி – ஐபிஎஸ் அதிகாரி, இணை ஆணையர், சென்னை வடக்கு மண்டலம்

டாக்டர் சவீதா ராஜேஷ்- இயக்குநர், சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் Pupil Saveetha Eco School

திருமதி சுதா கொங்கரா பிரசாத்- இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்

டாக்டர். ஆர்த்தி அருண்- காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்

வேல்ஸின் VFund 3.0 ஸ்டார்ட்அப் பிட்ச் 2023 இன் வெற்றியாளர்களான சில புதிய தலைமுறை பெண் தொழில்முனைவோரை ஆதரித்து அங்கீகரிப்பதோடு அவர்களின் புதுமையான வணிக யோசனைகளுக்காக முதலீடாக தலா ரூ. 2 லட்ச ரூபாயையும் கொடுத்துள்ளது.

மிகவும் ஊக்கமளிக்கும் இந்த நாளில் கலந்துகொண்ட ஒவ்வொரு பங்கேற்பாளர்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்! அனைவருக்கும் இனிய சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்.
#WomensDay #WomensDay2023 #VFund #Vfund2023

Cinema News Tags:வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டத்தில்

Post navigation

Previous Post: “VELS University International Women’s day celebrations”
Next Post: Propshell announces Mrs. Raadhika Sarathkumar as brand ambassador and special scheme for women buyers

Related Posts

சீயான் விக்ரமின் 61 வது திரைப்படம் சீயான் விக்ரமின் 61 வது திரைப்படம் Cinema News
வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ படத்தின் படப்பிடிப்பு வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ படத்தின் படப்பிடிப்பு Cinema News
SRK Universe Celebrates 10 Years of Chennai Express with Special Screening Across 52 Cities – Counting Jawan’s Month-Long Extravaganza!* Cinema News
ரஜினிகாந்த் அவர்கள் மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினார்!! ரஜினிகாந்த் அவர்கள் மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினார்!! Cinema News
லாஸ்லியாவின் அப்பா எந்த அளவுக்கு கேவலப்பட்டிருப்பார் Cinema News
BRAHMĀSTRA PART ONE MOTION POSTER LAUNCH BRAHMĀSTRA PART ONE MOTION POSTER LAUNCH Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme