Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

‘கஸ்டடி’ டீம் நாகசைதன்யா, வெங்கட்பிரபு, ஸ்ரீனிவாசா சித்தூரி ஆகியோர் இசைஞானி, லெஜண்டரி மாஸ்ட்ரோ இளையராஜாவை சந்தித்தனர்

‘கஸ்டடி’ டீம் நாகசைதன்யா, வெங்கட்பிரபு, ஸ்ரீனிவாசா சித்தூரி ஆகியோர் இசைஞானி, லெஜண்டரி மாஸ்ட்ரோ இளையராஜாவை சந்தித்தனர்

Posted on February 27, 2023February 27, 2023 By admin

நாகசைதன்யாவின் தமிழ்-தெலுங்கு பைலிங்குவல் புராஜெக்ட்டான ‘கஸ்டடி’ திரைப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் படக்குழு தற்போது ஈடுபட்டுள்ளது.
லெஜண்ட்ரி இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா தற்போது, ‘ராஜா லைவ் இன் கான்செர்ட்’ நிகழ்ச்சிக்காக ஹைதராபாத்தில் உள்ளார். எனவே, இந்த இசை நிகழ்ச்சிக்கு முன்னதாக ‘கஸ்டடி’ டீம் அவரை சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இளையராவுடன் நடந்த சந்திப்புக் குறித்து ஒரு ரசிகனாக நாக சைதன்யா பகிர்ந்து கொண்டதாவது, ‘மாஸ்ட்ரோ இளையராஜாவை சந்தித்தபோது என் முகத்தில் எவ்வளவு பெரிய புன்னகை. அவரது இசை என் வாழ்க்கையில் பல தருணங்களில் முக்கியமானதாக இருந்திருக்கிறது. அவரது இசை ரெஃபரன்ஸ் கொண்டு பல காட்சிகளையும், கதையையும் எனக்குள் நானே கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். இப்போது ‘கஸ்டடி’க்கு அவரே இசையமைத்து இருக்கிறார். உண்மையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்தான்’ எனக் கூறியுள்ளார்.

கீர்த்தி ஷெட்டி இதில் கதாநாயகியாக நடிக்கிறார். அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்க பிரியாமணி வலுவான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், சரத்குமார், சம்பத் ராஜ், ப்ரேம்ஜி, வெண்ணேலா கிஷோர், ப்ரேமி விஷ்வநாத் உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர்.

அக்கினேனி கதாநாயகனாக நடித்தப் படங்களிலேயே அதிக பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டப் படங்களில் இதுவும் ஒன்று. ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் தயாரித்துள்ளார். உயர்தரமான தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பத் தரத்துடன் இந்தப் படம் உருவாகி உள்ளது. பவன்குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். அபூரி ரவி வசனம் எழுத, எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

’கஸ்டடி’ திரைப்படம் மே 12, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும்.

நடிகர்கள்: நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, பிரியாமணி, சரத் குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன், வெண்ணேலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் மற்றும் பலர்.

படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:

கதை, திரைக்கதை, இயக்கம்: வெங்கட் பிரபு,
தயாரிப்பாளர்: சீனிவாச சித்தூரி,
பேனர்: ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்,
வழங்குபவர்: பவன் குமார்,
இசை: மேஸ்ட்ரோ இளையராஜா, லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் சங்கர் ராஜா,
ஒளிப்பதிவாளர்: எஸ்.ஆர்.கதிர்,
படத்தொகுப்பு: வெங்கட் ராஜன்
வசனங்கள்: அபூரி ரவி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராஜீவன்,
சண்டைப்பயிற்சி: ஸ்டன்ட் சிவா, மகேஷ் மேத்யூ,
கலை இயக்குநர்: டிஒய் சத்யநாராயணா,
மக்கள் தொடர்பு: வம்சி சேகர், சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்,
மார்க்கெட்டிங்: விஷ்ணு தேஜ் புட்டா

Cinema News Tags:‘கஸ்டடி’ டீம் நாகசைதன்யா, லெஜண்டரி மாஸ்ட்ரோ இளையராஜாவை சந்தித்தனர், வெங்கட்பிரபு, ஸ்ரீனிவாசா சித்தூரி ஆகியோர் இசைஞானி

Post navigation

Previous Post: Custody Team Naga Chaitanya, Venkat Prabhu, Srinivasaa Chitturi, meets Isaignani and Legendary Maestro Ilaiyaraaja
Next Post: Herewith i forward the press release pertaining to “VELS-Sevabharathi Free Mobile Medical Camp”

Related Posts

Nayanthara’s Connect in Telugu UV Creations To Present Nayanthara’s Connect in Telugu Cinema News
www.indiastarsnow.com இன்று தமிழ் சினிமாவில் அடுத்த நம்பர்-1 நடிகை யார்?? Cinema News
'hi நான்னா' திரைப்படம் டிசம்பர் 7 அன்று 5 மொழிகளில் உலகெங்கும் வெளியாகிறது ‘hi நான்னா’ திரைப்படம் டிசம்பர் 7 அன்று 5 மொழிகளில் உலகெங்கும் வெளியாகிறது Cinema News
‘ஸ்கிரிப்டிக்’ சென்னை, பிப்ரவரி 10, 2023:திரையுலக வரலாற்றில் ஒரு புதிய தொடக்கமாக ‘ஸ்கிரிப்டிக்’ (SCRIPTick) திரைக்கதை வங்கியை (Script Bank) தொடங்கியுள்ள மதன் கார்க்கி மற்றும் கோ. தனஞ்ஜெயன். Cinema News
லைகா புரடக்சன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் “பொன்னியின் செல்வன்” படத்தின் முதல் சிங்கிள் பாடல் “பொன்னி நதி” வெளியீடு லைகா புரடக்சன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் “பொன்னியின் செல்வன்” படத்தின் முதல் சிங்கிள் பாடல் “பொன்னி நதி” வெளியீடு Cinema News
உச்சிமலை காத்தவராயன்’ பாடலை அறிமுகப்படுத்துவதற்கான பட்டிமன்றத்தின் முன்னோட்டம் வெளியீடு Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme