Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

'சிக்லெட்ஸ்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

‘சிக்லெட்ஸ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Posted on February 26, 2023February 26, 2023 By admin
'சிக்லெட்ஸ்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு
‘சிக்லெட்ஸ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சாத்விக் வர்மா, கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘சிக்லெட்ஸ்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘திறந்திடு சிசேம்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சிக்லெட்ஸ்’. எஸ். எஸ். பி பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ஸ்ரீனிவாசன் குரு தயாரித்திருக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகரான சாத்விக் வர்மா மற்றும் ‘வலிமை’ ஜாக் ராபின்சன் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹைதர், மஞ்சீரா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். மேலும் ஸ்ரீமன், மனோபாலா, சம்பத்ராம், சுரேகா வாணி, ஜானகி, மீனாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். ‘துணிவு’ விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை ராஜு மேற்கொண்டிருக்கிறார்.

டீன்ஸ் டிராமா ஜானரில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னோட்டத்தில் காமமும், இளமை குறும்பும் ததும்பும் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. அதிலும் ஒரு இளம் பெண், ‘துளசி வாசமிக்க ஆணுறை கிடைக்குமா?’ என கேட்பது, அதிர்ச்சியாக இருந்தாலும், இன்றைய இளம் தலைமுறையின் மனநிலையைத் துல்லியமாக பிரதிபலிக்கிறது. அத்துடன் பெற்றோர்களுக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் இடையே காதலிப்பது தொடர்பான கருத்து மோதல்களும் இடம் பிடித்திருக்கிறது. மேலும் இப்படத்தின் டைட்டிலுடன் ‘2k கிட்ஸ்’ என்ற டேக்லைன் இணைக்கப்பட்டிருப்பதால், இதற்கு இணையவாசிகளிடத்தில் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.

Genaral News

Post navigation

Previous Post: வாத்தி 75 கோடி 8 நாட்களில் வசூல் ; ‘வாத்தி’ பட இயக்குனர் வெங்கி அட்லூரி மகிழ்ச்சி!
Next Post: விரைவான படப்பிடிப்பில் வேகமாக வளர்ந்து வரும் ‘எல். ஜி. எம்’

Related Posts

தமிழக அரசின் இ பாஸ் செல்லாது-indiastarsnow.com தமிழக அரசின் இ பாஸ் செல்லாது?????? Genaral News
பாரம்பரிய முறைப்படி நடந்த பூமி பூஜை! - மகிழ்ச்சியில் ‘ரூஃப்வெஸ்ட் நக்‌ஷத்ரா’ வாடிக்கையாளர்கள் பாரம்பரிய முறைப்படி நடந்த பூமி பூஜை! – மகிழ்ச்சியில் ‘ரூஃப்வெஸ்ட் நக்‌ஷத்ரா’ வாடிக்கையாளர்கள் Genaral News
சென்னையில் சிக்னல் கிடைக்காத செல்போனை விற்பனை செய்த நிறுவனத்துக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து Genaral News
Food for two as Food 42 – Actress Sakshi Agarwal participated in Lets Feed the HUNGRY together on World Hunger Day Genaral News
களவாணி – 2 பிரச்சனை தீர்ந்தது Genaral News
ஆற்றல் திரைவிமர்சனம்.!! Genaral News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme