கொடைக்கானலில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் ஒன்றையும் நடத்தி வருகிறார் நாயகன் கார்த்திக் சிங்கா,. கொடைக்கானலில் தீயணைப்பு துறையில் பணியாற்றும் நாயகி அனயாவை ஒரு தலையாக காதலிக்கும் கார்த்திக் சிங்கா, ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு ஆனந்த் பாபு, கார்த்திக் சிங்காவின் ஆதரவற்ற இல்லத்திற்கு ரூ.25 லட்சம் நன்கொடை கொடுக்க, அந்த பணத்தை கார்த்திக் சிங்காவிடம் இருந்து அஜய் ரத்னத்தின் ஆட்கள் மோசடி செய்து பறித்துவிடுகிறார்கள். இழந்த பணத்தை மீட்க முடிவு செய்யும் கார்த்திக் சிங்கா, மோசடி செய்தவர்கள் வழியிலேயே சென்று அவர்கள் இதுவரை மோசடி செய்த அனைத்து பணத்தையும் அவர்களிடம் இருந்து கைப்பற்ற திட்டம் போடுகிறார். அந்த திட்டத்தில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா?, அவருடைய காதல் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
வில்லனாக நடித்திருக்கும் அஜய் ரத்தினம் ,ரோபோ சங்கர் எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட், மாரிமுத்து, சிங்மமுத்து, சுவாமிநாதன், கு.ஞானசம்பந்தம், ஆனந்த்பாபு, கே.ஆர்.விஜயா, வைஷாலி தணிகா, கராத்தே ராஜா என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும், யாரும் மனதில் நிற்கவில்லை. சுபாஷ் கவியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்துள்ளது.
நாயகனின் ஒருதலை காதல், சமூக சேவை மற்றும் மோசடி கும்பலிடம் இருந்து சாமர்த்தியமாக பணத்தை கைப்பற்றுவது, என ஒரு முழுமையான கமர்சியல் ஆக்ஷன் கலந்த படத்தை இயக்குநர் சுவாரஸ்யமாக நகர்த்தியிருப்பதோடு, இரண்டாம் பாகம் இருப்பது போல படத்தையும் முடித்திருக்கிறார்.