தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள படம் ‘வாத்தி’. தெலுங்கில் இந்த படத்திற்கு ‘சார்’ என்று பெயரிட்டுள்ளனர்.
நாகவம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார்.
சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அடுத்த வாரம் பிப்ரவரி 17ஆம் தேதி தியேட்டர்களில் ‘வாத்தி’ படம் வெளியாகவுள்ள நிலையில் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர் படக் குழுவினர்.
நாளை மறுநாள் பிப்ரவரி 8ஆம் தேதி ‘வாத்தி’ பட டிரைலர் வெளியாகும் என வெளியிட்டு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
அந்த போஸ்டரில் மகாகவி பாரதி வேடத்தில் கையில் கம்புடன் தனுஷ் நிற்பது போல உள்ளது வடிவமைக்கப்பட்டுள்ளது.
தனுஷ் பின்னால் மாணவ மாணவிகள் வரிசையாக நிற்கின்றனர்
