‘கபாலி’ ‘காலா’ என ரஜினியின் பிரம்மாண்ட படைப்புகளை இயக்குனராக கொடுத்தவர் பா ரஞ்சித்
தற்போது விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
மறுபக்கம் நீலம் புரொடக்சன்ஸ் என்ற தன் சொந்த நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள 10வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இன்று பிப்ரவரி 6ம் தேதி மாலை 7 மணிக்கு தங்களது புதிய பட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற படத்தை இயக்கியவர் அதியன் ஆதிரை.
இவர் இயக்க உள்ள இந்த படத்திற்கு ‘தண்டகாரண்யம்’ என பெயரிட்டுள்ளனர்.
இதில் அட்டகத்தி தினேஷ் மற்றும் கலையரசன் இருவரும் நாயகர்களாக நடிக்கின்றனர்.
ரஞ்சித் இயக்கிய முதல் படமான ‘அட்டக்கத்தி’ படத்தில் இருவருமே நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் ரித்விகா, பாலசரவணன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க பிரதீப் ஒளிப்பதிவு செய்கிறார். செல்வா எடிட்டிங் செய்கிறார்.