ஷாருக்கான் நடிப்பில் சுமார் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள பதான் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். இதில் ஷாருக் கான் உடன் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் உலகமெங்கும் 7500-க்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
படம் தொடங்கியது முதல் எங்குமே தொய்வடையாமல் பார்த்துக்கொள்கிறது ஸ்ரீதர் ராகவனின் திரைக்கதை. இயக்குநர் சித்தார்த் ஆனந்த், ஒன்லைனாக ஸ்பை த்ரில்லருக்கு ஏற்றக் கதைக்களத்தை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். . உருமாற்றம் செய்யப்பட்ட சின்னம்மை வைரஸ், இந்தியா – பாகிஸ்தான் பிரச்னை, இந்தியா – ஆப்கானிஸ்தான் உறவு, சட்டப்பிரிவு 370 ரத்து, ஜி.பி.எஸ் வைத்து டார்கெட் செய்யும் ஏவுகணைகளின் செயல்பாடுகள் போன்றவற்றில் எல்லாம் இன்னமும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
பாகிஸ்தான் இந்தியாவில் கொரோனாவை விட அதி பயங்கரமான ஒரு வைரஸை செலுத்த நினைக்கிறது, இதனை இந்திய இராணுவத்தின் உளவாளியாக இருக்கும் ஷாருக்கான் எப்படி தடுக்கிறார் என்பதே பதான் படத்தின் ஒன்லைன். ஒவ்வொரு ஆக்சன் காட்சிகளிலும் தனது உயிரை கொடுத்து நடித்துள்ளார் ஷாருக்கான். வழக்கம்போல நடிப்பிலும் காமெடியிலும் அசத்தியுள்ளார், மறுபுறம் தீபிகா படுகோனே ஷாருக்கானுக்கு இணையாக நடிப்பிலும், சண்டை காட்சிகளிலும் அனைவரையும் கவர்ந்துள்ளார். ஜான் ஆப்ரகாம் ஒரு கொடூரமான வில்லனாக கலக்கியுள்ளார். ஷாருக்கானுக்கு அடுத்தபடியாக இவரே படத்தை காப்பாற்றுகிறார்.
படம் முழுக்க சேஸிங், பயரிங் என பரபரப்பாகவே செல்கிறது. படம் முழுக்க சிஜி காட்சிகள் நிறைந்திருந்தாலும், அவை கண்ணிற்கு உருத்தும் படியாக இல்லை. படம் ஆரம்பித்தல் இருந்து முடியும் வரை எங்கும் நிற்காமல் புல்லட் ரயில் போல் வேகமாக செல்கிறது, படத்தில் உள்ள சில சர்ப்ரைஸ் எளமெண்ட்களும் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டில் வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவிய நிலையில் பதான் அதிலிருந்து மீட்கும் வகையில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒளிப்பதிவாளர் சச்சித் பவுலோஸ் படத்தின் வேகத்திற்கு சமமான பங்களிப்பை அளித்துள்ளார். பின்னணி இசை ஓகே. என்னதான் ஆங்காங்கே சில குறைகள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பதான் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கிறது.