தனியார் ஆன்லைன் செய்தி நிறுவனம் ஒன்றில் பத்திரிகையாளராக வேலை பார்த்து வருகிறார் தையல் நாயகி (த்ரிஷா). அவரது அண்ணன் மகளை வீடியோ எடுத்து மிரட்டுவதாக புகார் எழ, அது தொடர்பான விசாரணையில் இறங்குகிறார் தையல் நாயகி. போலி ஃபேஸ்புக் கணக்கு மூலமாக நடைபெறும் இந்த விவகாரம் ஒருகட்டத்தில் முடிவுற்றதாக நினைக்கும்போது, அது வெறொரு பாதையில் தீவிரவாதி ஒருவருடன் பெண் ஒருவர் சாட் செய்கிறார். அவன் தீவிரவாதி என அந்த பெண்ணுக்கு தெரியாது. அந்த பெண் பயன்படுத்தும் டிபி போட்டோ, த்ரிஷாவின் அண்ணன் மகளின் போட்டோ.
போலி போட்டோவை வைத்து நடக்கும் இந்த சாட் பற்றி, ஒரு கட்டத்தில் த்ரிஷாவுக்கு தெரியவர, அவரும் அந்த 17 வயது பையனுடன் சாட் செய்கிறார். அவன் யார் என அறிய முற்படும் போது, இந்தியாவில் இருந்து அந்த நாட்டுக்குச் சென்ற அமைச்சர் ஒருவர், அங்கு எண்ணெய் டீல் ஒன்று செய்கிறார். அவருடன் எடுத்த போட்டோவை அந்த இளைஞர் பகிர்கிறார்.
அதைப்பார்த்த த்ரிஷா, தான் பணியாற்றும் ஊடகத்தில் அதை ப்ரேக்கிங் செய்தியாக்குகிறார். அதனால் பிரச்னை ஏற்படுகிறது. சம்மந்தப்பட்ட அமைச்சரும் கொல்லப்படுகிறார். த்ரிஷாவுக்கு அந்த போட்டோ எப்படி கிடைத்தது? என விசாரணையில் இறங்குகிறது போலீஸ். த்ரிஷாவையும், அவரது அண்ணன் மகளையும் அழைத்துக் கொண்டு, தீவிரவாதியை தேடி அந்த நாட்டுக்குச் செல்கிறது போலீஸ். அதன் பின் தீவிரவாதி பிடிக்கப்பட்டானா? த்ரிஷாவின் நிலை என்ன ஆனது? என்பதை அடுத்தடுத்து சஸ்பென்ஸ் குறையாமல் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் சரவணன்.
ஆனால், அந்தக் காட்சிகளும் அழுத்தமில்லாமல் மேலோட்டமாக கடந்திருப்பது முழுமையான உணர்விலிருந்து விலக்கி விடுகிறது. கபிலன் வரிகளில் ‘பனித்துளி’ பாடல் தேவையற்ற திணிப்பு என்றபோதிலும் அதன் காட்சியமைப்பும்,சத்யாவின் பின்னணி இசையும் ஈர்க்காமலில்லை. ஆலீம் – தையல் நாயகி இடையிலான உறவை கட்டமைத்திருக்கும் விதமும், அதற்கான காட்சிகளும் வெகுவாக ரசிக்க வைக்கிறது.
பத்திரிகையாளராக த்ரிஷா, ஒருவித திமிரான உடல்மொழியில், அடங்க மறுக்கும் அழுத்தமான கதாபாத்திரத்தில் முழுமையான தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், அவருக்கான ஓவர் ‘ஹிரோயினிச’ ஸ்டன்ட் காட்சிகள் நெருடல். எத்தனை பேர் வந்தாலும் ஒற்றை ஆளாக மிரட்டி பணியவைப்பது, கையில் எந்தவித ஆயுமில்லாமலிருக்கும் த்ரிஷா, துப்பாக்கியால் சுட்டபடியே முன்னேறுபவர்களை அசலாட்டாக அடித்து துவம்சம் செய்வது, பறந்து, தாவி தப்பிச்செல்லும் காட்சிகள் ஓவர் டோஸ். சிங்கிள் ஷாட்டில் த்ரிஷா பேசும் நீண்ட வசனங்கள் மெனக்கெடலை உறுதி செய்கிறது.
அவரைத் தவிர்த்து சுஸ்மிதாவாக நடித்திருக்கும் அனஸ்வர ராஜன் மற்றும் ஆலிம் கதாபாத்திரத்தில் நடித்திப்பவரின் நடிப்பு நேர்த்தியாகவும் யதார்த்தையொட்டி இருப்பது காட்சிகளுடன் எளிதாக ஒன்ற உதவுகிறது. தவிர, ஜான் மஹேந்திரன், லிசி ஆன்டனி, கோபி கண்ணதாசன் தேவையான நடிப்பை வழங்குகின்றனர். படத்தில் தையல் நாயகியிடம் மாணவி ஒருவர் தனது முகத்தோற்றம் குறித்து தாழ்வு மனப்பான்மைக்குள்ளாகும்போது, அவர், ‘படித்து பணம் சம்பாதித்து தோற்றத்தை மாற்றிக்கொள்’ என்கிறார். ’பெண்ணிய கருத்துகளை அழுத்தமாக பேசும் பத்திரிகையாளரான தையல் நாயகி.
படத்தின் இறுதியில் ‘எனது நாட்டில் வளங்கள் இல்லாமல் இருந்திருந்தால் நானும் என் நாடுட தலைவரும் கொல்லப்பட்டிருக்க மாட்டோம்’ என்ற வசனம், சர்வாதிகாரத்தால் உண்டான போராளிக் குழுக்கள், உள்ளிட்டவையும் இறுதிக்காட்சியும் படத்தை தனித்து காட்டுகிறது. துனிஷியா நாட்டின் வறண்ட நிலப்பரப்பின் சூடான மணைலையும், அதன் வழியே எழும்பியிருக்கும் முகடுகளையும், யதார்த்தம் மாறாமல் காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளரின் சக்திவேலின் கேமிரா மிரட்டியிருக்கிறது.