டிரைவர் ஜமுனா திரைப்படத்தில் பெண்களை மையப்படுத்திய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கதாநாயகிகளில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். தந்தையை இழந்த ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் மூத்த மகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். படத்தின் முக்கால்வாசி காட்சிகள் கால்டாக்ஸியிலேயே இடம் பெற்றதால், கார் ஓட்டிக் கொண்டே வில்லன்களை சமாளிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். விரைவாக கார் ஓட்டும் காட்சிகளில் கதையின் நாயகி என்பதை நிரூபித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாடகைக் கார் ஓட்டுநராக நடித்துள்ள த்ரில்லர் வகை திரைப்படம் டிரைவர் ஜமுனா. 2013 ஆம் வெளிவந்த வத்திக்குச்சி திரைப்படத்தின் இயக்குநர் கின்ச்ளின் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, ரஞ்சனி, அபிஷேக் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கால் டாக்ஸி டிரைவரான ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை கொலை செய்யப்படுகிறார். தந்தையின் இறப்பிற்குப் பிறகு, தந்தை ஓட்டிக் கொண்டிருந்த கால்டாக்சி டிரைவராக மாறுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒரு அரசியல் தலைவரை கொலை செய்யும் நோக்கில் புறப்படும் கூலிப்படைகளிடையே ஐஸ்வர்யா ராஜேஷ் சிக்கிக் கொள்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களிடமிருந்து தப்பித்தாரா ?அந்த கூலிப்படை அரசியல் தலைவரை கொன்றதா ? ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை ஏன் கொலை செய்யப்பட்டார்? என்பதே டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் கதை.