இயக்குனர் ராஜேஷ் ஆனந்த்லீலா இயக்கத்தில் நாயகி ப்ரியாமணி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “Dr 56”
கதையின் நாயகன் PR. ஒருவகையான நோயால் பாதிக்கப்பட்ட இவர், 56 நிமிடத்திற்கு ஒரு மாத்திரை எடுத்தால் மட்டுமே இவரால் உயிர் வாழ முடியும் என்ற சூழல்.
இச்சூழலில், தொடர்ந்து நடைபெறும் கொலைகளை PR தான் செய்கிறார் என்று கண்டறிகிறார் ப்ரியாமணி. இவர் கைது செய்யப்படும் அதேவேளையில், மற்றொரு மருத்துவரும் கொலை செய்யப்படுகிறார்.
இறுதியாக யார் இந்த PR.? மருத்துவர்களை கொலை செய்து வரும் அந்த மர்ம நபர் யார்.?? எதற்காக இந்த கொலைகள் நடைபெறுகிறது..??? என்பது மீதிக் கதை.
சி பி ஐ அதிகாரியாக மிடுக்காக வந்து தனது காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் நாயகி ப்ரியாமணி. நடக்கும் கொலைகளை கண்டுபிடிக்க ஒவ்வொரு வ்ழக்கையும் முடிச்சி போட்டு அடுத்தடுத்த கட்டத்துக்கு செல்லும் காட்சிகள் சிறப்பு..
மனித உடலில் மருந்து பரிசோதனை என்ற முக்கியமான விஷயத்தை கையில் எடுத்து அதை படமாக்கியிருக்கிறார் இயக்குனர். அதற்காக இயக்குனருக்கு ஒரு கைதட்டல் கொடுக்கலாம்.
ஒரு நோயைக் குணப்படுத்தும் மருந்து நடைமுறைக்கு வரும் முன், அந்த மருந்துகள் மனிதர் உடலில் செலுத்தி சோதனை நடத்தப்படும், அவ்வாறு நடத்தப்படும் சோதனை சாதனையாக முடிந்தால் நலம் அதுவே சோதனையாக முடிந்து பலருக்கும் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
இவ்வாறு பலரும் பல விதமான பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில். இது உலகம் முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த சம்பவத்தைத் தான் மையமாகக் கொண்டு இந்த கதையை எடுத்திருக்கிறார் இயக்குனர்.சரியான மூலக் கதையை கையில் எடுத்த இயக்குனர், அதை சொல்லும் விதத்தில் சற்று சறுக்கியிருக்கிறார்.நாயகன் PR ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.