இன்று வெளியாகியுள்ள “YUGI” திரைப்படமும் வாடகைத்தாய் மையமாக கொண்ட கதையாக உருவாக்கப்பட்டுள்ளது, இயக்குனர் லாக் ஹரிதாஸ் இயக்க ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் கதிர், நட்டி, நரேன், கயல் ஆனந்த் போன்ற பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் தொடக்கத்தில் கயல் ஆனந்தி திடீரென பேருந்து நிறுத்தத்தில் காணாமல் போகிறார். போலீஸ் உயர் அதிகாரியாக இருக்கும் பிரதாப் போத்தன், சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வருகிறார். ஆனந்தியை அரசியல் அமைப்பு சார்பாக நட்டியும், பிரதாப் போத்தன் சார்பில் டிடெக்டிவ் ஏஜென்சியை சேர்ந்த நரேனும் தேடுகிறார்கள்.சஸ்பெண்ட்டில் இருக்கும் கதிர் என்பவரை ஆனந்தியை தேடும் உதவிக்கு அனுப்பி வைக்கிறார் பிரதாப் போத்தன். தேடுதலில் பல திருப்பு முனைகள் வர ஆனந்தியை இறுதியில் கண்டுபிடித்தனரா இல்லையா? அவருக்கு என்ன ஆனது? என்பதுதான் மீதி கதை.
நாயகியாக வரும் ஆனந்தி இரண்டாம் பாதியில் தன்னுடைய நடிப்பால் திரைக்கதையை தாங்கி பிடித்து இருக்கிறார். இவருடைய அழுத்தமான நடிப்பு பார்ப்பவர்களை நெகிழ வைத்து இருக்கிறது.
இப்படமானது தமிழ் மலையாளம் என்று இரு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் ஜான் விஜய் மற்றும் வினோதினி வைத்தியநாதன் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
“YUGI” படத்தில் “NATTY” நட்டி கதாபாத்திரம் செய்யும் செயல்கள் குழப்பமாகவே இருந்தது இவர் யார் என்று தெரியும் போது கூட அவரின் கதாபாத்திரம் பெரிதாக ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. இப்படத்தில் இயக்குனர் ஜாக் ஹாரிஸ் கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார், “YUGI” திரைக்கதை கொடுமைதான் எனினும் வாடகைத்தாய் விசயத்தில் இப்படியும் நடக்கலாம் என்ற விழிப்புணர்வுக்காக படத்தைப் பாராட்டலாம் .