இன்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாகி உள்ளது யசோதா படத்தின் ஹீரோ சமந்தாவா என்று கேட்டால் இல்லை உண்மையில் இந்தப்படத்தின் ஹீரோ கதைதான்.ஆம், வாடகைத்தாய் என்ற ஒற்றைத்தொழில் எப்படி வியாபாரமாக மாறியிருக்கிறது என்பதை இயக்குநர் சொன்ன விதம் நமக்கு உண்மையான த்ரில்லிங் அனுபவத்தை கொடுத்திருக்கிறது.
முதல் பாதியில் கதையை பில்ட் செய்வதற்கான சில இடங்கள் தோய்வை ஏற்படுத்தினாலும், இராண்டாம் பாதி ஆரம்ப காட்சியில் இருந்து இறுதிவரை நம்மை சீட்டின் நுனியில் அமரவைத்தது. வாடகைத்தாயாக சமந்தா நுழையும் வீடும், அதற்குள் அமைந்த ஆர்ட் ஒர்க் நிச்சயம் பாராட்டத்தக்கது. மணிஷர்மாவின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலத்தை சேர்த்திருக்கிறது. வாடகைத் தாய்’ என்ற பெயரில் வறுமையில் வாடும் பெண்கள் சுரண்டப்படுவதையும், அழகு சாதனப் பொருள்களின் தயாரிப்பு நிறுவனங்களுக்குப் பின்னால் உள்ள சட்டவிரோதமான செயல்களையும் மையக் கருவாக எடுத்ததெல்லாம் பாராட்டிற்குரியதுதான்
காட்சிகள் செல்ல செல்ல விறுவிறுப்பின் வேகம் அதிகரித்து, மர்மங்கள் நிறைந்த இடைவேளை வரும்போது இது ஒரு “சாதாரண படம் அல்ல” என்று தோன்றும் அளவிற்கு சிறப்பாக முடிகிறது. இரண்டாம் பாதியில் ஒவ்வொரு மர்ம முடிச்சுகளும் அவிழும் போது படபடப்பையும், எதிர்பார்ப்பையும் அதிகரிக்க வைக்கிறது.பெரும்பாலான காட்சிகள் மருத்துவமனையில் நடந்தாலும் கலக்கலான ஒளிப்பதிவின் மூலம் ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.