படத்தில் கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லிங்கா சிறு வயதிலேயே தவறு செய்து விட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு செல்கிறார். அங்கு சிறையில் கரிகாலனிடம் சிலர் தகாத அங்கு நடந்து கொள்கிறார். இதனால் கரிகாலன் கோபம் அடைகிறார். பின் அவர்களை கொடூரமான முறையில் கரிகாலன் கொலை செய்கிறார். சிறு வயதிலேயே சிறைக்கு சென்ற கரிகாலன் ஆறு ஆண்டுகள் கழித்து தான் வெளியே வருகிறார்.
கரிகாலனை வெளியில் எடுக்க அவருடைய தாய் தான் கஷ்டப்படுகிறார். கரிகாலனின் தம்பி கோவலன் கதாபாத்திரத்தில் ஆர் எஸ் கார்த்திக் நடித்திருக்கிறார். இவருக்கு சிறுவயதிலிருந்தே கரிகாலன் மீது நடித்திருக்கிறார். தான் தன்னுடைய அன்பு செலுத்துகிறார் என்று அண்ணன் மீது வெறுப்பு செலுத்துகிறார். மேலும், கரிகாலன் தன் தாய் எவ்வளவு சொல்லியும் கொலை செய்வதை நிறுத்துவதே இல்லை. தவறான பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறார்.
அப்படி அவர் தொடர்ந்து கொலை செய்து வரும் நிலையில் கரிகாலன் ஒருமுறை இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை உடன் சிறை அடைக்கப்படுகிறார், எப்படியாவது தன் மகனை சிறையில் இருந்து வெளியே எடுக்க வேண்டும் என்று தாய் போராடுகிறார். பின் இந்த போராட்டத்தில் அவர் திடீரென இறந்து போகிறார். தனது அண்ணன் மீது இருக்கும் வெறுப்பினால் தன்னுடைய தாய்க்கு இறுதி சடங்கை கூட அண்ணனை செய்ய விடக்கூடாது என்று கோவலன் நினைக்கிறார்.
ஆனால், கரிகாலனின் நண்பர்கள் இதில் தலையிட்டு கரிகாலனை வெளிய எடுக்கும் முயற்சியை மேற்கொள்கிறார்கள். இந்த முயற்சியில் கரிகாலனுக்கு பரோல் கிடைத்ததா? அதற்குள் சிறையில் இருந்த கரிகாலன் கிடைத்ததா? செய்தார்? அண்ணன் மீது இருக்கும் கோபத்தினால் கோவலன் எடுத்த முடிவு என்ன? தாய் உடைய இறுதி சடங்கை செய்தது யார்? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் கார்த்திக் – லிங்கா இருவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.