Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மகிழ்ச்சி வெற்றிப் படத்தைத் தொடர்ந்து நாயகனாக

Posted on October 27, 2022October 27, 2022 By admin

*“மாவீரா”*

கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றித் திரைப்படங்களுக்கு பிறகு வ.கௌதமன் இயக்கும் புதிய படைப்பிற்கு “மாவீரா”என பெயரிட்டதோடு படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார். புகழ்பெற்ற “தலைமுறைகள்” நாவலை “மகிழ்ச்சி” என திரைப்படமாகவும், “சந்தனக்காடு” வீரப்பனின் வரலாற்றை நெடுந்தொடராகவும் உண்மைச்சம்பவங்களை மட்டுமே மையப்படுத்தி படைப்புகள் செய்த வ.கௌதமன் “மாவீரா”வில் முதன் முதலாக மண்ணையும், பெண்ணையும் மானத்தையும் காத்து வாழ்ந்த ஒரு முந்திரிக்கட்டு மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு படைப்பாக்குகிறார் .

“எதிரியை கொல்லணும் என்று நினைப்பதை விட அவன் மனதை வெல்லணும்” என்கிற இலக்கோடு இப்படைப்பிருக்கும் என நம்பிக்கை தரும் இயக்குனர் அதே நேரத்தில் கேட்பார் எவருமில்லை என்கிற தீய எண்ணத்தோடு எவர் வரினும் “அத்து மீறினால் யுத்தம்” என்கிற பிரகடனத்தையும் “மாவீரா” பேசும் என்கிறார்.

பரபரப்பான சம்பவங்களோடு ஆக்ஷன் கலந்து அதிரடியாக உருவாகும் மாவீராவிற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். ஒளிப்பதிவு வெற்றிவேல் மகேந்திரன், வசனம் பாலமுரளி வர்மன், படத்தொகுப்பு ராஜா முகமது, சண்டை பயிற்சி ‘ஸ்டண்ட்’ சில்வா, நடனம் தினேஷ், மக்கள் தொடர்பு நிகில் முருகன் என முன்னணி தொழிநுட்பக்கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

வி.கே புரடக்ஷன் குழுமம் முதன் முறையாக தயாரிக்கும் இப்படைப்பில் நடிக்கும் முன்னணி நடிகர், நடிகையர்கள் பட்டியல் விரைவில் வெளியாக இருக்கிறது.

Genaral News Tags:மகிழ்ச்சி வெற்றிப் படத்தைத் தொடர்ந்து நாயகனாக, வ.கௌதமன் இயக்கி நடிக்கும்

Post navigation

Previous Post: ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்
Next Post: ‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு படத்தின் டைட்டில் வெளியீட்டு தேதி அறிவிப்பு

Related Posts

நெஞ்சமுண்டு நேர்மையுடன்’ படத்தை திரையிடும் தேதி அறிவிப்பு Genaral News
Third Season of Chennai Kaalpandhu League to kick off on October 9 Genaral News
செட்டிநாடு கோழிஉப்புக்கறி செய்முறை Genaral News
Lectrix EV’s LXS G2.0, A Game-Changing Two-Wheeler EV with 93 Features, now in Tamil Nadu Genaral News
பாரம்பரிய முறைப்படி நடந்த பூமி பூஜை! - மகிழ்ச்சியில் ‘ரூஃப்வெஸ்ட் நக்‌ஷத்ரா’ வாடிக்கையாளர்கள் பாரம்பரிய முறைப்படி நடந்த பூமி பூஜை! – மகிழ்ச்சியில் ‘ரூஃப்வெஸ்ட் நக்‌ஷத்ரா’ வாடிக்கையாளர்கள் Genaral News
nalini-story_www.indiastarsnow.com நளினிக்கு பரோல் நீட்டிக்க கோர்ட் மறுப்பு! Genaral News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme