மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் சர்தார் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது கார்த்தி நடிப்பில் இந்த வருடம். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் ராணுவ உளவாளியாக இருக்கும் அப்பா கார்த்திக் தேசத்துரோகி என இந்திய அரசால் அறிவிக்கப்படுகிறார், இதனால் அவரது ஒட்டுமொத்த குடும்பமும் தற்கொலை செய்து விடுகிறது. பின்பு பையன் கார்த்தியை அவர் சித்தப்பா முனிஸ்காந்த் வளர்த்து வருகிறார். பின்னாலில் கார்த்தியும் போலீஸ் அதிகாரியாக மாறுகிறார். சமூக ஊடகங்களில் பிரபலமாக துடிக்கும் கார்த்திக்கு அவரது புகழை இன்னும் வளர செய்யும் விதமாக ஒரு கேஸ் கிடைக்கிறது, இறுதியில் அந்த கேஸ் அவரது அப்பா சர்தார் இடம் கொண்டு செல்கிறது. உண்மையிலேயே சர்தார் கார்த்திக் செய்த தவறுகள் என்ன? அவர் ஏன் தேச துரோகியாக அறிவிக்கப்பட்டார் என்பதே சர்தார் படத்தின் கதை.
சர்தார் படத்தின் ஹீரோ கார்த்தி என்பதைவிட மித்ரன் என்று சொல்லலாம், அந்த அளவிற்கு கதை மற்றும் திரைக்கதையில் கவனம் செலுத்தியுள்ளார். அவரது திரைக்கதையே இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி ஆகும். மித்ரன் சொல்ல நினைத்ததை அப்பா மகன் என இரு வேடங்களில் கார்த்தி நடித்த அசத்தியுள்ளார். அவரது ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்திற்கு மிகவும் பக்கபலமாக உள்ளது. அப்பா மகன் என இரு வேடங்களிலும் அசத்தியுள்ளார் கார்த்தி. அவரைத் தாண்டி இந்த படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவருக்குமே கதையில் முக்கியத்துவம் உள்ளது, யாருமே கதையில் தேவையில்லாமல் வந்து செல்லவில்லை.
ராசி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, முனீஸ்க்காந்த், ரித்விக் என பலர் நடித்துள்ளனர். .