Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

காட்ஃபாதர்' பட வெற்றி- நன்றி சொன்ன நயன்தாரா!

காட்ஃபாதர்’ பட வெற்றி- நன்றி சொன்ன நயன்தாரா!

Posted on October 16, 2022 By admin

Thank you to all the movie lovers and my fans for making GodFather a humongous blockbuster. It has been a delight to see all of celebrate our film with your loved ones in the theatre. GodFather is a very special film for me because of the people involved and the wonderful team behind it.

It was a privilege to share screen with Megastar Chiranjeevi Garu once again. He is a gem of a person and a powerhouse performer. Every moment on set with him has been nothing less than enriching. Thank you Chiranjeevi Garu.

I’d like to express my gratitude to director Mohan Raja Garu for trusting me continuously and collaborating with me for the third time. ‘Satya Priya’ is a layered and complex character and my director’s belief in me made it possible to bring her to life.

Everyone loves Salman Khan Sir and this movie shows why. Thanking you sir for your explosive act and for making this film bigger.

My love and respect for all my co-stars who shape my performances and make me a better actor. And a special mention to Satyadev and my little sister on screen, Tanya.

Thanking music director Thaman and cinematographer Nirav Shah sir for bringing in your expertise and brilliance to the world of GodFather. Kudos to the entire crew for their hard work and passion.

My gratitude to RB Choudary sir and NV Prasad sir for making this project on such a huge canvas. You are the dream producers any actor or technician would dream of having. And thank you to the entire team of Super Good Films for the effort and a hearty congratulations on nearing the magical mark of 100 films. The team of Konidela Production Company has been a delight to work with.

Finally, a big thanks to the audience for giving us such a blockbuster in the festive season.

Love.
Nayanthara.

‘காட்ஃபாதர்’ படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக்கிய சினிமா பார்வையாளர்களுக்கும் எனது ரசிகர்களுக்கும் நன்றி. திரையரங்குகளில் இந்தப் படத்தை அன்போடு நீங்கள் கொண்டாடி மகிழ்வதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘காட்ஃபாதர்’ படத்திற்கு பின்னால் உழைப்பை கொடுத்து வேலை செய்த குழு, என் நண்பர்கள் என அனைவராலும் இந்தப் படம் என் மனதுக்கு நெருக்கமான ஒன்றாக எப்போதும் இருக்கும்.

தன்மையான குணம் கொண்ட, நடிப்பில் மிரட்டி எடுக்கும் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி அவர்களுடன் மீண்டும் ஒருமுறை படத்தில் இணைந்து நடித்திருப்பது எனக்கு பெருமையான விஷயம். செட்டில் அவருடன் இருந்த ஒவ்வொரு தருணமும் மறக்க முடியாதது. சிரஞ்சீவி சாருக்கு நன்றி.

என் திறமை மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மோகன்ராஜா அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.

‘சத்யப்பிரியா’ பல அடுக்குகள் கொண்ட சிக்கலான கதாபாத்திரம். இயக்குநர் என் மீது கொண்ட நம்பிக்கை காரணமாகவே, திரையில் என்னால் அதனை திறமையாக செய்து முடிக்க முடிந்தது. சல்மான்கான் அவர்களை நடிகராக அனைவருக்கும் ஏன் அதிகம் பிடித்திருக்கிறது என்பதை இந்தப் படம் மூலம் நேரில் பார்த்து தெரிந்து கொண்டேன். உங்கள் திறமையான நடிப்பின் மூலம் இந்தப் படத்தை இன்னும் அடுத்த உயரத்திற்கு எடுத்து சென்றதற்கு நன்றி சார்.

என் திறமையை ஒவ்வொரு படத்திலும் மெருகேற்றும் என்னுடைய சக நடிகர்களுக்கு என்னுடைய அன்பும் மரியாதையும். இந்தப் படத்தில், சத்யதேவ் மற்றும் என்னுடைய தங்கையாக நடித்திருந்த தான்யாவையும் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும்.

இசையமைப்பாளர் தமன் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷார் சார் இருவரும் தங்களது அபாரமான திறமையான பணியால் ‘காட்ஃபாதர்’ உலகத்தை இன்னும் அற்புதமாக்கி இருக்கிறார்கள். அவர்களுக்கும் என்னுடைய நன்றி. கடின உழைப்பை கொடுத்த படத்தின் மொத்த குழுவுக்கும் பாராட்டுகள்.

RB செளத்ரி சார் மற்றும் NV பிரசாத் இருவரும் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக்கியதற்கு நன்றி. எந்தவொரு டெக்னீஷியனும் எதை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ள விரும்பக்கூடிய பிரம்மாண்ட தயாரிப்பாளர்கள் நீங்கள். ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ அணியினர் அனைவரின் கடின உழைப்புக்கு நன்றி மற்றும் நூறாவது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் என்னுடைய வாழ்த்துகளும். Konidela Production Company உடன் இணைந்து வேலை பார்த்ததில் மகிழ்ச்சி.

இறுதியாக, இந்த திருவிழா காலத்தில் வெளியான இந்தப் படத்தைப் பார்த்து மிகப்பெரிய வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிகப் பெரிய நன்றி!!

Genaral News Tags:காட்ஃபாதர்' பட வெற்றி- நன்றி சொன்ன நயன்தாரா!

Post navigation

Previous Post: Hip Hop Tamizha starrer ‘Veeran’ shooting wraps up
Next Post: கதாபாத்திர தோற்றப் புகைப்படத்தை வெளியிட்டு, மலையாள நட்சத்திர ஸ்டார் பிருத்விராஜின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த ‘சலார்’ படக்குழு

Related Posts

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் புதிய திரைப்படம் ! ! இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் புதிய திரைப்படம் ! ! Genaral News
சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒவ்வொருவரின் வாழ்க்கையும் எப்படி மாறுகிறது என்பதே சஞ்ஜீவன் – இயக்குனர் மணி சேகர் Genaral News
சென்னையில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத தமிழக அரசை கண்டித்து தயாநிதி மாறன் எம்.பி பேசியதாவது Genaral News
களவாணி – 2 படத்திற்கு ” பகுதி ” தடை மட்டும் நீங்கியுள்ளது Genaral News
தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் இந்தியாமுயற்சியில்!!! தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் இந்தியாமுயற்சியில்!!! Education News
மலேசியப் பொருட்கள் இறக்குமதியை குறைத்துக் கொள்ள முடிவு மலேசியப் பொருட்கள் இறக்குமதியை குறைத்துக் கொள்ள முடிவு? Genaral News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme