Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பாலிவுட்டை அதிர வைத்த சாம் CS

பாலிவுட்டை அதிர வைத்த சாம் CS

Posted on September 10, 2022 By admin

தமிழ் திரையுலகின் முன்னணி இளம் இசையமைப்பாளர் சாம் CS இப்போது தனது இசையால் பாலிவுட்டை அதிர வைத்துள்ளார். விக்ரம் வேதா இந்திப்பதிப்பின் இசை பெரும் அதிர்வை உண்டாக்கியதுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஓர் இரவு படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம் CS. விக்ரம் வேதா மூலம் தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். அப்படத்தின் பின்னணி இசை, பாடல்கள் மொழி தாண்டி இந்தியாவெங்கும் புகழ் பெற்றது. அப்படத்தின் தீம் இசை பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றது. இசையில் தனித்துவம் காட்டி தனக்கென தனி ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களை மயக்கினார். கண்ணம்மா மெலோடி பாடல் தமிழகமெங்கும் அனைவரின் இதயத்தையும் கொள்ளையடித்தது. மெலோடி பாடல்களில் இன்றைய இளைய ஃபேவரைட் இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார். கைதி, அடங்க மறு, சாணிக்காயிதம், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், சுழல் போன்ற தொடர் வெற்றிகளை அடுத்து, சமீபத்தில் வெளியான ராக்கெட்ரி அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.

ராக்கெட்ரி வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா படத்தின் இந்திப்பதிப்பு டிரெய்லர் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. படத்தின் இசைக்கு பல தரப்புகளிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இசையமைப்பாளர் சாம் CS க்கு பாலிவுட்டிலிருந்து பல வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. இந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து இந்திய மொழிகளிலும் இசையமைக்க ஆரம்பித்துள்ளார் சாம் CS.

Genaral News Tags:பாலிவுட்டை அதிர வைத்த சாம் CS

Post navigation

Previous Post: உடல் நலக்குறைவால் சிகிச்சை எடுத்துவந்த பாரதிராஜா, நேற்று வீடு திரும்பினார்.
Next Post: Venus Celebrates 60 years of Excellence

Related Posts

பெண் குழந்தைக்கு தந்தையான மகிழ்ச்சியில் யோகி பாபு Genaral News
தொண்டர்களின் மகிழ்ச்சிதான் தனது உயிர்மூச்சு என மோடி வாரணாசியில் பேச்சு!!!! Genaral News
பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் இணைகிறார் எஸ்.ஜே.சூர்யா Genaral News
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு – ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி Genaral News
Chiyaan Vikram-Pa. Ranjith team up for “Thangalaan” Genaral News
ஓ.பி.எஸ் மகன் மத்திய அமைச்சர் ரவீந்திரநாத்குமார் என்ற போஸ்டர்களால் பரபரப்பு Genaral News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme