Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் கேப்டன் திரைப்படம் (செப்டம்பர் 8, 2022) உலகம் முழுக்க வெளியாகிறது

இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் கேப்டன் திரைப்படம் (செப்டம்பர் 8, 2022) உலகம் முழுக்க வெளியாகிறது

Posted on September 7, 2022 By admin

திரையுலகில் வெகு சில இயக்குநர்களே தங்கள் வழக்கமான படைப்புலகத்திலிருந்து வெளிவந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படத்தை தர முயல்வார்கள். அத்தைகைய தொலைநோக்கு பார்வைக்கொண்ட இயக்குநர்களில் முதன்மையானவராக தன்னை நிரூபித்தவர் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன். ஸ்பேஸ் திரில்லராக உருவான டிக் டிக் டிக், வேம்பயர் திரில்லரன மிருதன், உயிருடன் வரும் டெடி பொம்மை சார்ந்த காதல் கதையான டெடி என ஒவ்வொரு படமும் அவருக்கு மட்டுமல்ல தமிழ்படைப்புலகத்திற்கே முற்றிலும் புதிதானது. அந்த வகையில் முற்றிலும் புதிதான களத்தில் ஏலியன் சர்வைவல் திரில்லராக ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் திரைப்படம் (செப்டம்பர் 8, 2022) உலகம் முழுக்க வெளியாகிறது

படம் குறித்து இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் கூறியதாவது…
ஒவ்வொரு படத்திற்கும் ஒரு ஆரம்ப புள்ளி இருக்கும் அந்த கணத்திலிருந்தே அதன் மொத்த பயணமும் தொடங்கும். கேப்டன் படத்தை பொறுத்தவரை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடும் படியான ஒரு படைப்பை, இது வரை பார்த்திராத விஷுவல்களுடன் புதிய ஆக்சனுடன் பிரமாண்டமாக தர வேண்டுமென்பதாக இருந்தது. முதலில் இது சாத்தியமில்லை என்றே நினைத்தேன் ஆனால் ஆர்யா மற்றும் ஸ்வரூப் தந்த ஆதரவு எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை தந்தது. என் மீது அவர்கள் வைத்த முழுமையான நம்பிக்கையில் தான் நான் இந்த படைப்பை உருவாக்க முடிந்தது. ஒரு படத்தின் பட்ஜெட்டை விட இயக்குநருக்கும் நடிகருக்கும் உள்ள சுமூகமான உறவால் தான் ஒரு அருமையான படம் உருவாக முடியும் அந்த வகையில் ஆர்யாவுடன் டெடி படத்தில் பணியாற்றும் போதே ஒரு சகோதரர் போன்ற உறவு உண்டாகிவிட்டது. இந்தப்படத்தில் அவரது உழைப்பும் அர்ப்பணிப்பும் அபாரமானது. முன்னெப்போதிலும் இல்லாத ஒரு முழுமையான திரையரங்கு அனுபவமாக இப்படம் இருக்கும் என்றார்.

Think Studios உடன் நடிகர் ஆர்யாவின் The Show People இணைந்து தயாரிக்கும் “கேப்டன்” படத்தில் ஆர்யாவுடன் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவில் S.யுவா (ஒளிப்பதிவு), D இமான் (இசை), பிரதீப் E ராகவ் (எடிட்டர்), S.S.மூர்த்தி (தயாரிப்பு வடிவமைப்பு), R.சக்தி சரவணன்- K கணேஷ் (ஸ்டண்ட்ஸ்), தீபாலி நூர் (ஆடை வடிவமைப்பு), S மூர்த்தி (ஸ்டில்ஸ்) , NXgen (VFX), V அருண் ராஜ் (VFX மேற்பார்வையாளர்), Igene (DI), சிவசங்கர் V (வண்ணக்கலைஞர்), தபஸ் நாயக் (ஆடியோகிராபி), அருண் சீனு (ஒலி வடிவமைப்பு), கோபி பிரசன்னா (பப்ளிசிட்டி டிசைன்), S சிவக்குமார் (தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் ), K. மதன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One(மக்கள் தொடர்பு) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

Cinema News Tags:2022) உலகம் முழுக்க வெளியாகிறது, இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் கேப்டன் திரைப்படம் (செப்டம்பர் 8

Post navigation

Previous Post: Filmmaker Shakti Soundar Rajan on ‘Captain’
Next Post: முழு நீள அரசியல் “படமாக உருவாகும் *கட்சிக்காரன்” கதையின் நாயகனாக களமிறங்கும் விஜித் சரவணன்”

Related Posts

மறைந்தபின்னும் கூட விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் மயில்சாமி ; சித்ரா லட்சுமணன் உருக்கம் வெப்சீரிஸாக உருவாக வேண்டிய கதை மயில்சாமியின் மறைவால் குறும்படமாக மாறியது ; இயக்குனர் ராகுல் உருக்கம் Cinema News
விளையாட்டு வீரர்களை வாழ்த்தும் பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் காமன் வெல்த் விளையாட்டில் பதக்கங்களை வென்றெடுத்தவர்களை பாராட்டும் பிரபாஸ் Cinema News
ஸ்வீட் காரம் காபி, ஜூலை 6 அன்று பிரீமியர்; ஒரு ஆரோக்கியமான குடும்பம் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த மூன்று பெண்களைப் பற்றி மறக்க முடியாத மகிழ்ச்சி சவாரியில் பார்க்கிறது. Prime Video’s Upcoming Tamil Original Series, Sweet Kaaram Coffee, to Premiere on 6 July; a Wholesome Family Watch About Three Women From Different Generations on an Unforgettable Joyride Cinema News
The Most Awaited Pushpa 2 Concept Teaser on April 7th The Most Awaited Pushpa 2 Concept Teaser on April 7th Cinema News
Bullet Train across theatres in the country in languages - English, Hindi, Tamil and Telugu, on 4th August, Bullet Train across theatres in the country in languages – English, Hindi, Tamil and Telugu, on 4th August, Cinema News
Atlee, Venkat Prabhu, Karthik Subbaraj, Shiv Panditt & many more express their excitement for Prime Video’s Tamil Original series ‘Vadhandhi – The Fable of Velonie Atlee, Venkat Prabhu, Karthik Subbaraj, Shiv Panditt & many more express their excitement for Prime Video’s Tamil Original series ‘Vadhandhi – The Fable of Velonie’ Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme