Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

பாரம்பரிய முறைப்படி நடந்த பூமி பூஜை! - மகிழ்ச்சியில் ‘ரூஃப்வெஸ்ட் நக்‌ஷத்ரா’ வாடிக்கையாளர்கள்

பாரம்பரிய முறைப்படி நடந்த பூமி பூஜை! – மகிழ்ச்சியில் ‘ரூஃப்வெஸ்ட் நக்‌ஷத்ரா’ வாடிக்கையாளர்கள்

Posted on August 31, 2022 By admin

திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்தில் ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தின் புதிய சொகுசு குடியிருப்புகள் திட்டம் ‘ரூஃப்வெஸ் – நக்‌ஷத்ரா’ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. 9.62 ஏக்கர் பரப்பளவில் ஆடம்பரமான மற்றும் குறிப்பிடத்தக்க அமைதியான வாழ்க்கைக்கு ஏற்ற வீடுகளை உருவாக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்ட இத்திட்டம் கடந்த மே மாதம் தொடங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்தின் மிக முக்கியமான அடையாளமாக இருக்கும் வகையில், ஆடம்பரமான வில்லாக்கள் மற்றும் அமைதியான இயற்கை எழில் மிகுந்த தங்கும் இடங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரூஃப்வெஸ் நிறுவனம் தற்போது தங்களது திட்டத்தின் கிழ் வெளியிட்ட அனைத்து வில்லாக்களையும் விற்பனை செய்திருப்பதோடு, சொன்னது போலவே தற்போது வில்லாக்களை கட்ட தொடங்கியுள்ளது.

ரூஃப்வெஸ்ட் நக்‌ஷத்ரா வில்லாக்கள் திட்டத்தில் வீடுகள் வாங்கிய வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரின் இடங்களிலும் பாரம்பரிய முறைப்படி பூமி பூஜை நடத்தி ஒவ்வொருவருக்கும் கலசத்தையும் வழங்கியுள்ளார்கள். பொதுவாக இதுபோன்ற குடியிருப்பு திட்டங்களை தொடங்கும் போது ஒரே ஒரு பூமி பூஜை செய்வது தான் வழக்கம். ஆனால், ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தினர் வாடிக்கையாளர்கள் அனைவரின் இடத்திலும் பூமி பூஜை நடத்தி அனைவருக்கும் கலசம் வழங்கியிருப்பது, வாடிக்கையாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியதோடு, அவர்களை மகிழ்ச்சியடையவும் செய்திருக்கிறது.

உயர்ந்த வாழ்க்கைத் தரம், அமைதியான சூழல், பாதுகாப்பான சுற்றுசூழல் என இன்றைய வீடு வாங்குபவர்களின் தேவைகளை மிக துல்லியமாக கணித்து, அவர்களுக்கு ஏற்ற வசதிகள் மற்றும் சலுகைகள் என நுகர்வோர் விருப்பங்களை நிறைவேற்றுவதை நோக்கமாக கொண்டு ரூஃப்வெஸ்ட் நிறுவனம் அதன் முந்திய திட்டங்களில் மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ரூஃப்வெஸ்ட் – நக்‌ஷத்ரா மூலம் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் தனது மைல்கல்லை பிரம்மாண்டமான முறையில் அடைந்துள்ளது.

OMR-ல் வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளான திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம் பகுதிகள் மெட்ரோ ரயில் மற்றும் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. மாற்று வணிக மாவட்டமாக உருவெடுத்துள்ள இப்பகுதிகள் எதிர்காலத்தில் சென்னையை போன்று நவீன துணை நகரமாக மாறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Genaral News Tags:பாரம்பரிய முறைப்படி நடந்த பூமி பூஜை! - மகிழ்ச்சியில் ‘ரூஃப்வெஸ்ட் நக்‌ஷத்ரா’ வாடிக்கையாளர்கள்

Post navigation

Previous Post: Singer Iykki Berry Brings To Town Rapsilla Concert At Phoenix Marketcity This Weekend
Next Post: ‘மேதகு-2’ திரைப்படம் ‘மூவி வு’ட் ஒடிடி தளத்தில் வெளியானது.

Related Posts

மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கும் 'பெடியா' திரைப்படத்தில் தான் ஏற்றுள்ள புதுமையான கதாபாத்திரம் குறித்தும், கற்றுக்கொண்ட விஷயங்கள் குறித்தும் மனம் திறக்கிறார் வருண் தவான் Complete over-howl! Varun Dhawan talks about undoing what’s done before with ‘Bhediya’: Genaral News
Naturals Salon 760th launched by Athulya Ravi , C.K.Kumaravel, Priya Arun at Nookampalayam, Chennai Naturals Salon 760th launched by Athulya Ravi , C.K.Kumaravel, Priya Arun at Nookampalayam, Chennai Genaral News
சென்னையில் நேற்றுபூஜையுடன் துவங்கப்பட்ட டெடி ஹீரோ ஆர்யா. ஹீரோயின் சாயிஷா. Genaral News
பொள்ளாச்சி-அப்பாவி பெண்ணை 5 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் நிரூபணம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல். Genaral News
சென்னையில் நடந்த இந்திரன் பாண்டியன் இல்லத் திருமண விழாவில், மணமக்களை சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினார். சென்னையில் நடந்த இந்திரன் பாண்டியன் இல்லத் திருமண விழாவில், மணமக்களை சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினார். Genaral News
டெபாசிட் பறிகொடுத்த அமமுக, மநீம, நாம் தமிழர் Genaral News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme