Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Arun Vijay starrer “Borrder” to hit screens worldwide on October 5, 2022

“பார்டர்” திரைப்படம் உலகமெங்கும் 2022 அக்டோபர் 5 வெளியாகிறது

Posted on August 29, 2022 By admin

நடிகர் அருண் விஜய் தொடர்ச்சியாக வெற்றிப்படைப்புகளை தந்து கவனம் ஈர்த்து வருகிறார். அவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியான யானை திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக, ஓடிடியில் வெளியான தமிழ்ராக்கர்ஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டு படைப்புகளும் ரசிகர்களிடத்திலும், விமர்சகர்களிடத்திலும் ஒருங்கே பாராட்டை குவித்துள்ளது. தொடர் வெற்றிகளால் வர்த்தக வட்டாரங்களிடையே அருண் விஜய் படங்களுக்கு பெரிய மதிப்பு ஏற்பட்டுள்ளது. All in Pictures T. விஜயராகவேந்திரா வழங்கும், இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்துள்ள “பார்டர்” படம் அறிவிக்கப்படதிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்பாக வெளியான இப்படத்தின் டிரெய்லர் அனைவரது ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் அக்டோபர் 5, 2022 அன்று உலகம் முழுவதும் இப்படம் திரைக்கு வரும் என்று தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் அகில இந்திய திரையரங்க உரிமையைப் பெற்றுள்ள 11:11 Production Dr. பிரபு திலக் கூறுகையில்…
தமிழ் திரையுலகில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான அருண் விஜய் சாரின்” பார்டர்” படத்தை 11:11 Productions சார்பில் வெளியிடுவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் 11:11 Productions ல் எப்பொழுதும் உள்ளடக்கத்தில் சிறந்த திரைப்படங்களை தயாரித்து வெளியிடவே விரும்புகிறோம், சிறந்த பொழுதுபோக்குடன் பார்வையாளர்களின் இதயம் கவரும் படங்களை வெளியிடுவதே எங்கள் நோக்கம். சந்தேகத்திற்கு இடமின்றி, பார்டர் படம் அனைத்து காரணிகளையும் ஒருங்கே கொண்டுள்ளது . தனித்துவமான திரைக்கதைகள் மூலம் தமிழ் திரையுலகில் மதிப்பு மிக்கவராக போற்றப்படும் இயக்குநர் அறிவழகன், இப்படத்தில் உச்சம் தொட்டுள்ளார். இந்த திரைப்படத்தில் ஈடுபட்டுள்ள தொழில் நுட்ப திறமையாளர்களின் அருமையான உழைப்பு, அருண் விஜய் சாரின் அற்புதமான நடிப்பு படத்தினை மிகச்சிறந்ததாக மாற்றியுள்ளது. நாங்கள் இப்படத்தினை மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

இயக்குநர் அறிவழகன் எழுதி இயக்கியுள்ள “பார்டர்” படத்தில் அருண் விஜய், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஸ்டெஃபி படேல் என ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளது. T.விஜயராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்தை 11:11 Production Dr. பிரபு திலக் வெளியிடுகிறார். மற்றும் தொழில் நுட்ப குழுவில் சாம் CS (இசை), B ராஜசேகர் (ஒளிப்பதிவு), சாபு ஜோசப் (எடிட்டிங்), ஷக்தி வெங்கட்ராஜ் M (கலை இயக்கம்), ஹீரா அறிவழகன் (ஆடை வடிவமைப்பாளர்), விவின் S.R. (நிர்வாகத் தயாரிப்பாளர்), உமேஷ் பிரணவ் (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்), & Sync Cinema (ஒலி வடிவமைப்பு) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

Cinema News Tags:“பார்டர்” திரைப்படம் உலகமெங்கும் 2022 அக்டோபர் 5 வெளியாகிறது

Post navigation

Previous Post: Arun Vijay starrer “Borrder” to hit screens worldwide on October 5, 2022
Next Post: ஆந்திராவை அதிர வைத்த ‘கோப்ரா’ படக்குழு

Related Posts

ஆக்சன் திரைப்படத்தின் அப்டேட் Cinema News
Adithya Varma Film Review Adithya Varma Film Review Cinema News
’அரியவன்’ திரை விமர்சனம்-indiastarsnow.com ’அரியவன்’ திரை விமர்சனம் Cinema News
N 4 – திரை விமர்சனம்-indiastarsnow.com N 4 – திரை விமர்சனம் Cinema News
பிரைம் வீடியோவின் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் பிரைம் வீடியோவின் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவரிலிருந்து ஒரு புதிய காட்சி Cinema News
கூகுள் குட்டப்பா’ ட்ரைலர் வெளியீடு இளம் இயக்குநர்கள் மூத்த இயக்குநர்களை மதிப்பதில்லை கே எஸ் ரவிக்குமார்!!! Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme