மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸில் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் தன் சொந்த ஊரிலிருந்து கிளம்பி மும்பை வருகின்றார் விஜய் தேவரகொண்டா. அங்கே தன் தாய் ரம்யாகிருஷ்ணனுடன் சேர்ந்து தெருவோரத்தில் டீ கடை நடத்துகிறார். மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் புகழ்பெற்ற பயிற்சியாளரை சந்தித்து பயிற்சியில் இணையும் விஜய் தேவரகொண்டா வாழ்வில் அனன்யா பாண்டே குறுக்கிட சில பல பிரச்சினைக்குப் பின் இறுதியாக அவர் அந்தப் பட்டத்தை வென்றாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதி திரைக்கதை.
லைகராக விஜய் தேவரகொண்டா. திக்கிப் பேசுவது, சிக்ஸ்பேக் கொண்டு மிரட்டுவது, வெறி கொண்டு ரிங்கில் எதிரிகளை அடித்து துவம்சம் செய்வது என படத்திற்கான அவரது உழைப்பு திரையில் தெறிக்கிறது.