Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மூவி வுட் ஒடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'யுத்த காண்டம்'

மூவி வுட் ஒடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘யுத்த காண்டம்’

Posted on August 23, 2022 By admin

இந்தியாவின் முதல் பிராப்பர் சிங்கிள் ஷாட் ஆக்‌ஷன் மூவி ‘யுத்த காண்டம்’ இப்போது மூவி வுட் ஒடிடி தளத்தில்..

வருடத்திற்கு வெறும் 99 ரூபாயில் நூற்றுக்கணக்கான படங்கள் ; மூவி வுட் தரும் சர்ப்ரைஸ்

இந்தியாவின் முதல் பிராப்பர் சிங்கிள் ஷாட் ஆக்‌ஷன் மூவி என்ற அறிவிப்போடு உருவாகியுள்ள ‘யுத்த காண்டம்’ என்கிற திரைப்படம் பல சர்வதேச விருதுகளையும் வென்றிருக்கிறது.. இந்தப்படம் கடந்த ஆகஸ்ட்—15ஆம் தேதி மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றுள்ளது.

‘கன்னிமாடம்’ புகழ் ஸ்ரீராம் கார்த்திக் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கிரிஷா குறூப், சுரேஷ் மேனன், போஸ் வெங்கட், யோக் ஜேபி என சிறந்த நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். குமரன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தை, பாரடைஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளம் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியாகும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தங்களது தளத்தில் கொண்டுள்ளது.

அந்தவகையில் மலையாளத்தில் உருவாகி, கேரளாவில் கம்யூனிஸ்ட்களின் எதிர்ப்பை சம்பாதித்த ‘பிப்ரவரி-29’ என்கிற படமும் ஆக-18ல் இதே மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது.

மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளத்தில் வருடத்திற்கு வெறும் 99 ரூபாய் மட்டுமே கட்டணமாக செலுத்தி இந்த தளத்தில் வெளியாகும் அனைத்து படங்களையும் பார்த்துக்கொள்ள முடியும். இல்லாவிட்டாலும் விரும்பும் படங்களை 5 ரூ முதல் 50 ரூ வரை கட்டணம் செலுத்தி பார்க்கின்ற வசதியும் இந்த தளத்தில் (மட்டுமே) உண்டு.

தெளிவு பாதையில் நீச தூரம், விண்வெளி பயணக்குறிப்புகள், உலக திரைப்பட விழாவில் விருது பெற்ற இன்ஷா அல்லா என சிறிய பட்ஜெட்டில் உருவான மிகச்சிறந்த படங்களையும் இதில் பார்த்து ரசிக்கலாம். அதுமட்டுமல்ல ரசிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என தங்களது அபிமான நடிகர்களின் சிறந்த படங்களையும் இதில் பார்க்க முடியும்.

தியேட்டர்களில் ரிலீஸாகும் வாய்ப்பு கிடைக்காத சிறிய படங்களை வசூல் பங்கீடு என்கிற முறையில் இந்த மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளத்தில் வெளியிடும் வசதியும் உண்டு. சிறிய பட்ஜெட் படங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடைய முடியும்.

—

Thanks & Regards

Cinema News Tags:மூவி வுட் ஒடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'யுத்த காண்டம்'

Post navigation

Previous Post: திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் நடந்த ’கோப்ரா’ திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா !
Next Post: Vish the fiery rebellious villain Baddie in Liger is ready to rock silver screens on Friday !!!

Related Posts

மாமனிதன்' திரைப்படத்திற்கு டோக்கியோ திரைப்பட விருது வழங்கி கௌரவம் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘மாமனிதன்’ படத்திற்கு டோக்கியோ திரைப்பட விருது Cinema News
AVATAR: THE WAY OF WATER HAS A MAMMOTH OPENING WEEKEND WORLDWIDE COLLECTING 3,500 CR! Cinema News
மலையாள சூப்பர் ஹிட் படமான #மாளிகப்புரம் தமிழில் வருகிற 26ம் தேதி தமிழில் வெளியாகிறது மலையாள சூப்பர் ஹிட் படமான #மாளிகப்புரம் தமிழில் வருகிற 26ம் தேதி தமிழில் வெளியாகிறது Cinema News
விக்ரம் 58-ல் இணைய ஆவலுடன் காத்திருக்கிறேன் இர்பான் பதான் cricketer Irfan Pathan tweet-about-chiyaan-58 Cinema News
Ranbir Kapoor’s first look as Shiva is fierce and daunting Brahmastra motion poster out Ranbir Kapoor’s first look as Shiva is fierce and daunting Cinema News
நித்தம் ஒரு வானம் திரை விமர்சனம்! நித்தம் ஒரு வானம் திரை விமர்சனம்! Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme