Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

திரையில் கண்டிராத அதிரடி மாஸ் வில்லனாக நடிகர் விஷ், “லைகர்” மூலம் ரசிகர்களை மகிழ்விக்க இந்த வாரம் வெள்ளித்திரையில் வருகிறார்.!!!

திரையில் கண்டிராத அதிரடி மாஸ் வில்லனாக நடிகர் விஷ், “லைகர்” மூலம் ரசிகர்களை மகிழ்விக்க இந்த வாரம் வெள்ளித்திரையில் வருகிறார்.!!!

Posted on August 23, 2022 By admin

இந்த வாரம் எல்லோருக்கும், கடந்து போகும் சாதாரணமான வாரமாக இருக்கலாம், ஆனால் திரை ஆர்வலர்களுக்கும் லைகர் குழுவிற்கும் இது அப்படியானதல்ல. இந்த ஆண்டின் மிக முக்கியமான வாரம். ஆம் இந்த வாரம் இந்தியாவின் மிக முக்கிய படைப்பான லைகர் வெள்ளித்திரையில் வெளியாகிறது. இந்தியா முழுதும் இதயங்களை கொள்ளை கொண்டிருக்கும் நாயகன் விஜய் தேவரகொண்டாவின் படம் என்பது மட்டுமல்ல, இந்தப்படம் மூலம் இதுவரை திரையில் கண்டிராத அதிரடியான மாஸ் வில்லனாக நடிகர் விஷ் வெள்ளித்திரையை கலக்கவுள்ளார்.

12 வருட போராட்டங்களுக்கு பிறகு நடிகனாக இந்த இடத்தை அடைவது நடிகர் விஷ் அவர்களுக்கு அத்தனை எளிதானதாக இல்லை. மாடலாக துவங்கி, துணை இயக்குநராக வேலை பார்த்து Puri Connects எனும் பெருமை மிகு நிறுவனத்தின் CEO வாக மாறியது வரை அவர் தன் முன்னேற்றத்திற்கு 110 சதவீத உழைப்பை தர வேண்டியிருந்தது. திரையுலகில் உறவினர்கள் இல்லாத பின்னணியில் இருந்து வந்த அவரது பயணம் யாரும் நினைத்து பார்த்திராத பெரிய போராட்டங்கள் அடங்கியது.

மிக இளம் பன்முக நடிகராக மிளிரும் விஷ் பல தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கிய மெஹபூபா திரைப்படம் அவருக்கு பெரிய பெயரை பெற்று தந்தது. விஷ் எப்போதும் பூரி ஜெகன்நாத் அவர்களை, குருவாக தனது நண்பராக தன் நலம்விரும்பியாக மதிப்பவர். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஷ் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இது.

சமீபத்தில் வெளியான “லைகர்” டிரெய்லரில் சில துணுக்கு காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ரசிகர்களிடம் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார் விஷ். பாலிவுட்டின் அறிமுகப்படத்திலேயே மிகப்பிரமாண்ட வில்லனாக நடிப்பது அவரது திரைப்பயனத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது

தயாராகுங்கள் இந்த வெள்ளிக்கிழமை உங்களை கொள்ளை கொள்ள வருகிறது “லைகர்” . இந்தியாவின் அதிரடி மாஸ் ஆக்சன் திரைப்படம் உங்கள் அபிமான திரையரங்குகளில். “லைகர்” 25 ஆகஸ்ட் முதல் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில்.

Cinema News Tags:“லைகர்” மூலம் ரசிகர்களை மகிழ்விக்க இந்த வாரம் வெள்ளித்திரையில் வருகிறார்.!!!, திரையில் கண்டிராத அதிரடி மாஸ் வில்லனாக நடிகர் விஷ்

Post navigation

Previous Post: Vish the fiery rebellious villain Baddie in Liger is ready to rock silver screens on Friday !!!
Next Post: நட்சத்திரம் நகர்கிறது’ இசை வெளியீட்டு விழா

Related Posts

நீயா 2 திரைப்படத்தில் நடிகைகளின் கதாபாத்திரம் குறித்த தகவல் Cinema News
சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு அசுரன் படத்தை பார்த்து பிரமிப்புடன் பதிவிட்ட தெலுங்கு சூப்பர்ஸ்டார் Cinema News
Udhayanidhi has handled the releases of both the movies perfectly” – Actor Shaam’s Thanksgiving Cinema News
விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார். Cinema News
நடிகர் ஈ.ராமதாஸ் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார் இயக்குநர் மற்றும் நடிகருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பு காரணமாக காலமானார். Cinema News
Dada to hit screens worldwide on February 10 Dada to hit screens worldwide on February 10 Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme