Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் நடந்த ’கோப்ரா’ திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா !

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் நடந்த ’கோப்ரா’ திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா !

Posted on August 23, 2022 By admin

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரிப்பில் ‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது.

இப்படத்தின் முன்வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் திருச்சி செண்ட்ஜோசப் கல்லூரியில் ரசிகர்களுடன் கலந்துரையாடினர்.

இவ்விழாவினில்

நடிகை மீனாட்சி பேசியதாவது…
விக்ரம் சார் பொறுத்தவரை ஒவ்வொரு படத்திலும் அவரது முழு உழைப்பை தருவார். நாமெல்லாம் சில வருடம் ஒரே விசயத்தை செய்தால் சலிப்பாகிவிடுவோம் ஆனால் அவர் 61 வது படத்திலும் முதல் படம் போல் உழைக்கிறார் அது அவரிடத்தில் மிகவும் பிடிக்கும்.

நடிகை மிருணாளினி பேசியதாவது…
முதலில் விக்ரம் சாருடன் நடிப்பதை என்னால் நம்பமுடியவில்லை. அவரது படங்களை தியேட்டரில் ரசிகையாக பார்த்து ரசித்திருக்கிறேன். அவருடனே நடிப்பேன் என நினைத்துப் பார்க்கவில்லை. மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. இப்படம் உங்களுக்கு புதிய அனுபவத்தை தரும்

நடிகை ஶ்ரீநிதி ஷெட்டி பேசியதாவது
தமிழில் எனக்கு முதல் படம், படத்திற்காக நானும் மிக ஆவலுடன் காத்திருக்கிறேன். மிக சிறப்பான படைப்பாக வந்துள்ளது. உஙகள் அனைவருக்கும் பிடிக்கும்.

நடிகர் சீயான் விக்ரம் பேசியதாவது…
நான் திருச்சிக்கு சிறு வயதில் வந்திருக்கிறேன். நிறைய சுத்தியிருக்கிறேன் அப்போதே செண்ட்ஜோசப் கல்லூரி பிடிக்கும் இக்கல்லூரியில் நீங்கள் படிப்பது பெருமை. ’கோப்ரா’ படத்தைப் பொறுத்தவரை நிறைய புதுமைகள் இதில் இருக்கிறது. உங்களுக்கு அந்நியன் பிடிக்குமெனில் அது இதில் இருக்கிறது அதைத்தாண்டி சயின்ஸ் ஃபிக்சன் இருக்கிறது. எமோஷன் காமெடி ஆக்சன் எல்லாம் கலந்து இருக்கும். அஜய் ஞானமுத்துவின் முதல் இரண்டு படங்களும் வித்தியாசமாக இருக்கும். அதே போல் இந்தப்படமும் மிக வித்தியாசமாக செய்துள்ளார். படம் மிக ஃப்ரெஷ்ஷான படமாக இருக்கும். இன்னும் ஒரு வாரத்தில் படம் வருகிறது. உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி

நிகழ்வின் முடிவில் கல்லூரி மாணவர்கள் இணைந்து விக்ரம் அவர்களின் உருவப்படம் வரைந்த பெயிண்டிங்கை பரிசாக அளித்தார்கள்.

Cinema News Tags:திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் நடந்த ’கோப்ரா’ திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா !

Post navigation

Previous Post: குண்டான் மலை நிச்சயம் வெற்றி கொண்டான் மலை – தயாரிப்பாளர் கே.ராஜன் பாராட்டு
Next Post: மூவி வுட் ஒடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘யுத்த காண்டம்’

Related Posts

ஸ்ரீதேவி- தி லைஃப் ஆஃப் எ லெஜண்ட் Cinema News
கட்சிக்காரன்’ திரைப்பட விமர்சனம் Cinema News
நடிகை டாப்ஸீ பண்ணு ஓட்டப்பந்தய வீராங்கனையாக Cinema News
கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் சாணிக்காயிதம் திரைப்படத்தின்சிறப்புக் காட்சி வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் சாணிக்காயிதம் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ Cinema News
சல்லியர்கள்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரதமர் இந்திரா காந்தி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்தார்! -சல்லியர்கள்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேச்சு Cinema News
Actor Santhosh Prathap on Kondraal Paavam Actor Santhosh Prathap on Kondraal Paavam Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme