Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

25 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த 'சீதா ராமம்

25 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த ‘சீதா ராமம்’

Posted on August 21, 2022 By admin

துல்கர் சல்மான்- ஹனு ராகவபுடி – வைஜெயந்தி மூவிஸ் = ஸ்வப்னா சினிமா கூட்டணியில் உருவாகி, கடந்த வாரம் வெளியான ‘சீதா ராமம்’ உலகம் முழுவதும் வார இறுதி நாட்களில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூல் செய்து புதிய சாதனையை படைத்திருக்கிறது.

நடிகர் துல்கர் சல்மான், பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்த காவிய காதல் கதையான ‘சீதா ராமம்’, உலகம் முழுவதும் பார்வையாளர்களின் இதயங்களை வென்று வருகிறது. படம் வெளியான தருணத்திலிருந்து ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்களால் படத்தின் வசூல் ஏறுமுகத்தில் தொடங்கியது. முதல் நாள் வசூலை விட, இரண்டாம் நாள் வசூல் அதிகம். மேலும் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையன்று எதிர்பாராத வகையிலான வசூலை ‘சீதா ராமம்’ பெற்றுள்ளது. இதுவரை ‘சீதா ராமம்’ உலகம் முழுவதும் 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக திரையுலக வணிகர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.

குறிப்பாக விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து திரையரங்குகளிலும் பார்வையாளர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. பல பகுதிகளில் ‘சீதா ராமம்’ கூடுதல் திரையரங்குகளில் வெளியானது. வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் மட்டுமல்லாமல் சிறுநகரங்களில் இருக்கும் ஒற்றை திரையரங்குகளிலும் ‘சீதா ராமம்’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. திங்கட்கிழமை முன்பதிவுகள் படத்தின் வெற்றியை உறுதி செய்திருப்பதாக திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக வசூலிக்கும் என திரை உலக வணிகர்கள் கணித்துள்ளனர். மேலும் ‘சீதா ராமம்’ திரைப்படம், அடுத்தடுத்த இரண்டு வாரங்களில் எட்டு விடுமுறை நாட்கள் இருப்பதால், பார்வையாளர்கள் பெரிதளவில் இப்படத்தினை கொண்டாடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. திங்கட்கிழமை அன்று நடைபெற்ற முன் பதிவு விற்பனையுடன் 600K அமெரிக்க டாலர்களை கடந்துள்ளது. அமெரிக்காவில் வார இறுதி வசூல், ‘சீதா ராமம்’ படத்திற்கு கிடைக்கும் என்றும், இந்தப் படத்தில் சிறந்த நடிப்பு, சிறந்த காதல் கதை இருப்பதால் விரைவில் ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் இணையும் என்றும் திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.

காவிய காதல் கதையான ‘சீதா ராமம்’ கதையை பார்வையாளர்களும், விமர்சகர்களும் எல்லையற்ற வகையில் காதலித்து வருகின்றனர். போரின் பின்னணியில் நடைபெறும் உணர்வுபூர்வமான காதல் கதை என்பதால், பார்வையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை அளித்து வருகிறது.

திரையில் மாயாஜாலம் நிகழ்த்தும் காதல் ஜோடிகளான துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோரின் தனித்துவமான நடிப்பு… இயக்குவர் ஹனுராகவபுடியின் பிரத்யேகமான எழுத்து மற்றும் இயக்கம். .. விஷால் சந்திரசேகரின் மயக்கும் இசை… பி எஸ் வினோத்தின் பிரமிக்கத்தக்க ஒளிப்பதிவு.. ஸ்வப்னா சினிமா – வைஜெயந்தி மூவிஸ் போன்ற முன்னணி படத் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் வெளியீடு… ஆகிய காரணங்களுக்காகவும் இப்படத்தினை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

Cinema News Tags:25 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த 'சீதா ராமம்', ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வசூலை எட்டும் துல்கர் சல்மானின் 'சீதா ராமம்'

Post navigation

Previous Post: ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘மாமனிதன்’ படத்திற்கு டோக்கியோ திரைப்பட விருது
Next Post: காமன் வெல்த் விளையாட்டில் பதக்கங்களை வென்றெடுத்தவர்களை பாராட்டும் பிரபாஸ்

Related Posts

Dhanushs-second-directorial-will-be_indiastarsnow.com தனுஷ் இயக்கும் அடுத்த படம் கோலிவுட்டின் பாகுபலியாக இருக்கும் – ஷான் ரோல்டன் சொல்கிறார் Cinema News
Jiivi Fame Actor Vetri Gallery-indiastarnsow (1) Jiivi Fame Actor Vetri Gallery Cinema News
நான்-லீனியர் சிங்கிள் ஷாட் படத்தை உங்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி பார்த்திபன் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் படத்தை உங்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி பார்த்திபன் Cinema News
வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ படத்தின் படப்பிடிப்பு வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ படத்தின் படப்பிடிப்பு Cinema News
சாணி காயிதம் படத்தில் நடிக்கும்வரை நடிப்பு என்பது சலிப்பான ஒன்று என்றே கருதினேன்” – செல்வராகவன் சாணி காயிதம் படத்தில் நடிக்கும்வரை நடிப்பு என்பது சலிப்பான ஒன்று என்றே கருதினேன்” – செல்வராகவன் Cinema News
IDIMUZHAKKAM GV பிரகாஷ் குமார்-காயத்திரி நடிப்பில், இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில், உருவாகியுள்ள “ இடிமுழக்கம் Cinema News

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme